சல்மா சோபன்

சல்மா சோபன் (Salma Sobhan ) என்பவர் வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞராவார். 1937 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 அன்று சல்மா பிறந்தார்.[1] இவரது இயற்பெயர் இரசீதா அக்தர் பானு என்பதாகும். கல்வியாளர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலராகவும் இவர் செயல்பட்டார். பாகித்தானின் முதல் பெண் வழக்கறிஞராக 1959 ஆம் ஆண்டு சல்மா சிறப்பு பெற்றார்.[2] டாக்கா பல்கலைக்கழக சட்ட பீடத்தின் உறுப்பினராகவும் , தேசிய மனித உரிமை கண்காணிப்புக் குழுவான ஐன்-ஓ-சலிசு கேந்திராவின் இணை நிறுவனராகவும் சல்மா திகழ்கிறார்.

சல்மா சோபன்
Salma Sobhan
সালমা সোবহান
தாய்மொழியில் பெயர்সালমা সোবহান
பிறப்புசல்மா ரசீதா அக்தர் பானு[1]
(1937-08-11)11 ஆகத்து 1937
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு30 திசம்பர் 2003(2003-12-30) (அகவை 66) [1]
குல்சன் நகரம், டாக்கா, வங்காளதேசம்
தேசியம்பங்களாதேசி
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பெற்றோர்மொகமது இக்ரமுல்லா (தந்தை)
சைசுதா சுக்ரவர்த்தி இக்ரமுல்லா (தாயார்)
உறவினர்கள்

பின்னணி

தொகு

சல்மா 1937 ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்தார். இவருடைய தந்தை முகமது இக்ரமுல்லா , பாக்கித்தானின் முதல் வெளியுறவு செயலாளராவார்.[2] தாயார் சைசுதா சுக்ரவர்த்தி இக்ராமுல்லா , பாக்கித்தானின் அரசியலமைப்பு சபையின் முதல் இரண்டு பெண் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் ஐ.நா மற்றும் மொராக்கோவுக்கான தூதராக பாக்கித்தானின் பிரதிநிதியாக பணியாற்றினார். இவரது தாயார் பேகம் கல்கத்தாவின் சுக்ரவர்த்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாய் வழியில் சோபன் வங்காள முதல்வரும் பாக்கித்தான் பிரதமருமான உசைன் சகீத் சுராவர்த்தியின் மருமகள் ஆவார். இவரது தந்தை வழியில் இந்தியாவின் துணைத் தலைவரும் இந்தியாவின் தலைமை நீதிபதியுமான முகம்மது இதயத்துல்லாவின் மருமகள் ஆவார்.

சல்மா 1962 ஆம் ஆண்டில் பொருளாதார நிபுணரான இரகுமான் சோபனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களின் மூத்த மகன் தைமூர் 1981 ஆண்டு 18 வயதில் ஒரு விபத்தில் இறந்தார். இவர்களின் இரண்டாவது மகன் பாபர் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் பணிபுரிகிறார். இளைய மகன் இயாபர் சோபன் வங்காளதேச ஆங்கில நாளிதழான டாக்கா டிரிப்யூனின் தலைமை ஆசிரியராவார். சோபனின் சகோதரி சோர்ர்டானின் இளவரசி சர்வத் ஆவார். இவருக்கு எனம் என்ற சகோதரனும் நாசு என்ற இன்னொரு சகோதரியும் உள்ளனர்.

கல்வி மற்றும் தொழில்

தொகு

சல்மா சோபன் இங்கிலாந்தில் உள்ள வெசுடன்பேர்டு பள்ளியில் கல்வி பயின்றார். 1958 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சின் கிர்டன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1959 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் லிங்கன் சங்கத்திற்கு வாதாட அழைக்கப்பட்டார். பிறகு கராச்சியில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார். எம்/எசு சர்ரிட்சு & பீச்செனோ எனும் அமைப்பிற்கு உயர் நீதிமன்றத்தில் சட்ட உதவியாளராக பயிற்சி பெற்றார் . திருமணத்திற்குப் பிறகு 1962 ஆம் ஆண்டு முதல் டாக்கா பல்கலைக்கழகத்தில் சட்டப் பிரிவில் பேராசிரியராக கற்பிக்கத் தொடங்கி 1981 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1] 1974 ஆம் ஆண்டில் இவர் வங்க தேச சட்டம் மற்றும் சர்வதேச விவகார நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். பின் உச்ச நீதிமன்ற சட்ட அறிக்கைகளைத் திருத்தும் பொறுப்பு வகித்தார்.

மனித உரிமைகள் செயல்பாடு

தொகு

சல்மா சோபன் 1986 ஆம் ஆண்டில் ஐன் ஓ சாலிசு கேந்திரா என்ற மனித உரிமை அமைப்பை தனது எட்டு தோழர்களுடன் சேர்ந்து நிறுவினார். இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக 2001 ஆம் ஆண்டில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் அனன்யா பத்திரிகை விருதையும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புக்காக, நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழுவின் விருதையும் வென்றார். மேலும் 2001 ஆம் ஆண்டு வங்கதேச சட்ட உதவி மற்றும் சேவை அறக்கட்டளை வாரியத்திற்கும், வங்காளதேசம் ஊரக முன்னேற்றக் குழு மற்றும் நிசெரா கோரி ஆகிய நிறுவனங்களுக்கும் சல்மா சோபன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாரியத்தில் பணியாற்றினார். சல்மா சோபன் மூன்று சர்வதேச பெண்ணிய வலைப்பின்னல்களில் உறுப்பினராக உள்ளார். ஆசியா பசிபிக் பெண்கள் சட்டம் மற்றும் மேம்பாடு, முசுலீம் சட்டங்களின் கீழ் வாழும் பெண்கள் மற்றும் போட்டி கனடா போன்ற பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.

சல்மா சோபனின் வங்காளதேசத்தில் பெண்களின் சட்ட நிலை என்ற நூல் 1975 ஆம் ஆண்டு வெளியானது. இதோடு 1981 ஆம் ஆண்டு விவசாயிகளின் சட்டம் பற்றிய கருத்தும், வேறு சிறந்த வாய்ப்பில்லை , பெண் தொழில்துறை தொழிலாளர்கள் போன்ற பல படைப்புகள் வெளிவந்தன.

அமர்த்தியா சென் தொடங்கிய புரோட்டிச்சி அறக்கட்டளை இவரது பெயரில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு விருதை நிறுவியுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Eminent HR activist Barrister Salma Sobhan passes away". The Daily Star. 31 December 2003. http://archive.thedailystar.net/2003/12/31/d31231011616.htm. 
  2. 2.0 2.1 Hameeda Hossain (2012). "Sobhan, Salma". In Sirajul Islam; Ahmed A. Jamal (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (இரண்டு ed.). Asiatic Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் July 22, 2017.
  3. Hameeda Hossain (December 31, 2004). "Salma's journey into activism". The Daily Star. http://archive.thedailystar.net/2004/12/31/d412311501103.htm. பார்த்த நாள்: January 26, 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_சோபன்&oldid=3867215" இலிருந்து மீள்விக்கப்பட்டது