சவிக்கை
முளைப் பொட்டல் (பேச்சு வழக்கில் முளப் பொட்டல் என்பர்; ஆங்கிலம்: Mula pottal) அல்லது சவிக்கை என்பது தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதைச்சுற்றிய பல மாவட்டங்களில் உள்ள எல்லா கிராமங்களிலும் இருக்கும் ஒரு முளைப்பாரி எடுக்கும் இடமாகும். இதற்கென ஒரு தனி திட்டு மாதிரியான ஒரு கட்டிடம் கட்டப்படும். முற்காலத்தில் கூரையாக இருந்த இக்கட்டிடங்கள் தற்போது ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. இந்த முளைப்பொட்டலில் ஊர்ப் பஞ்சாயத்தையும் நடத்த பயன்படுத்துவர்.[1]
புதுவயலில் இருக்கும் ஒரு முளைப்பட்டல் ஒட்டியுள்ள ஒரு தெருவிற்கு முளைப்பொட்டல் தெரு என வழங்கி வருகின்றனர்.[2]
இந்த முளைப்பொட்டலின் பக்கத்தில் இளவட்டக்கல்லும் வைத்திருப்பார்கள். அக்காலத்தில் முளைப்பொட்டலிலேயே இளவட்டக்கல் தூக்கும் போட்டியும் நடைபெறும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2016-03-07.
- ↑ http://www.devakottainagarathar.org/member_detail.php?fl_temple_id=&member_id=27171&order=2&start=800[தொடர்பிழந்த இணைப்பு]