சவுக்கடி படுகொலைகள்
சவுக்கடி படுகொலைகள் என்பது இலங்கையின் கிழக்கே உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி என்ற கடலோர மீனவக் கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள், 20 செப்டம்பர் 1990 அன்று காலையில் சீருடை அணிந்த குழுவினரால், துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டு, சவங்களை குழிக்குள் தள்ளி தீயிட்டு எரிக்கப்பட்ட கொடுமையான நிகழ்வாகும். சவுக்கடி கிராமம், ஏறாவூர் எனும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நகரத்தின் அருகில் அமைந்துள்ளதால், இந்தப் படுகொலையுடன் முஸ்லிம்களும் தொடர்புபட்டிருப்பதாக தமிழர்கள் ஐயம் கொண்டனர். மேலும் படுகொலை புரிந்தவர்கள் தமிழிலும், சிங்களத்திலும் பேசியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதுவரை இப்படுகொலை செய்தவர்களை கண்டுபிடிக்க காவல் துறையால் இயலவில்லை. [1][2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- படுகொலை செய்யப்பட்ட 31 பேருக்கு நினைவு பிரார்த்தனை, வீரகேசரி, 21 செப்டம்பெர் 2015