சவ்வாதுப் புலவர்

சவ்வாதுப் புலவர் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஓர் இசுலாமியத் தமிழ்ப் புலவர் ஆவார்.

  1. சேதுபதி ரகுநாயகன்
  2. விசயானந்த ரங்கன்
  3. பிரம்பூர் ஆனந்த ரங்க துரை
  4. முத்து கிருஷ்ணன்
  5. கச்சி செல்லப்பன்

ஆகிய வள்ளல்களை இவர் பாடியுள்ளார்

எமனீச்சரம் எனும் ஊரினர். தமிழ்ப் புலவர் ஒருவரால் 'வண்டமிழின் எண்ணோ, எழுத்தோ, இசையோ, இயல்புலவர் கண்ணோ, சவ்வாதுக் கவி' எனப் பாராட்டப்பட்டவர். வசைபாடுவதில் காளமேகப் புலவரை ஒத்து விளங்கினார். 'வண்டமிழ் சவ்வாது வாயெல்லாம் நஞ்சே' என்று கூறக்கூடிய அளவிற்கு நச்சுப்பல் உடையவர். ஒருமுறை இவருக்குப் பண உதவி செய்ய மறுத்த சேஷையங்கார் என்பவரைச் சினத்துடன்,

வீசம் பணம் கொடுக்காத சேசா
வீரியம் பாம்பு கடித்துச் சாசா

என்று சபிக்க அன்றே அவர் பாம்பு கடித்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சர்க்கரைப் புலவரின் மைத்துனர் ஆவார்.

படைப்புகள்

தொகு

உசாத்துணை

தொகு
  • தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவ்வாதுப்_புலவர்&oldid=3397313" இலிருந்து மீள்விக்கப்பட்டது