சாகர்மல் கோபா

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

சாகர்மல் கோபா (Sagarmal Gopa) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திரப்போராட்ட வீரரும் தேசபக்தருமாவார். இவர் 1900 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று பிறந்தார். 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக இவர் பங்கேற்றார். ஜெய்சல்மேர் நகர ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை கோபா எதிர்த்தார். இதனால் ஜெய்சல்மேர் மற்றும் ஐதராபாத்து நகரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார். நாடு கடத்தப்பட்ட போதும் கோபா சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்காக தொடர்ந்து பணியாற்றினார். தந்தையின் இறப்புக்காக இவர் ஜெய்சால்மேருக்கு திரும்பியபோது 1941 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் இவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 அன்று கோபா சிறையில் எரிக்கப்பட்டார்.[1]

1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் சாகர்மால் கோபா

சாகர்மல் கோபாவின் நினைவாக இந்திய அரசு 1986 ஆம் ஆண்டு ஒரு தபால் தலை வெளியிட்டது. இந்திரா காந்தி கால்வாயின் ஒரு கிளைக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர்மல்_கோபா&oldid=3109285" இலிருந்து மீள்விக்கப்பட்டது