சாகுன் பரிகார்

சாகுன் பரிகார் (Shagun Parihar) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்தியப் பெண் அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஐ. கே. குஜ்ரால் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தொழில்நுட்பப் பட்டம் பெற்ற பரிகார் ஆய்வு மாணவர் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். பரிகார் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் கிஷ்த்வார் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2] [3][4]

சாகுன் பரிகார்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில்
8 அக்டோபர் 2024 – பதவியில் உள்ளார்
முன்னையவர்சுனில் குமார் சர்மா
தொகுதிகிஷ்துவார் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்ஆய்வு மாணவி, அரசியல்வாதி

வரலாறு

தொகு

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சாகுன் பரிகாரின் தந்தை அஜித் பரிகார் மற்றும் சித்தப்பா அணில் பரிகார் இருவரும் 2018ஆம் ஆண்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். 2024 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கையில், சாகுன் பரிகார் ஆய்வு மாணவராக இருந்தார்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=47
  2. Kishtwar Constituency Election Results 2024
  3. "BJP's Shagun Parihar, whose father was killed in terror attack, wins in Kishtwar". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  4. "Kishtwar Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகுன்_பரிகார்&oldid=4150941" இலிருந்து மீள்விக்கப்பட்டது