சாகே அணை
சப்பானின் யமகட்டா மாகாணத்தில் உள்ள ஓர் அணை
சாகே அணை (Sagae Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பப்பட்டு இந்த அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர் வழங்கல் மற்றும் மின் உற்பத்திக்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 231 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 340 எக்டேர்களாகும். 109000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]
சாகே அணை Sagae Dam | |
---|---|
அமைவிடம் | சப்பான், யமகட்டா மாவட்டம் |
புவியியல் ஆள்கூற்று | 38°27′19″N 140°2′18″E / 38.45528°N 140.03833°E |
கட்டத் தொடங்கியது | 1972 |
திறந்தது | 1990 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 112மீ |
நீளம் | 510மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 109000 |
நீர்ப்பிடிப்பு பகுதி | 231 |
மேற்பரப்பு பகுதி | 340 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sagae Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
- ↑ Sakanoi, Kazuyuki; Nakamura, Masashi; Nagano, Katsuyoshi (1989). "Fill-type dams in Tohoku region. Sagae and Shichigashuku dams as examples". Tsuchi To Kiso;(Japan) 37 (3).