சாக்கியா - 59 (நெல்)
சாக்கியா - 59 (Chakia-59) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மற்றும் நீண்டகால நெல் வகையாகும்.[1] 150 - 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், உத்தரப் பிரதேசத்தின், சந்தௌலி மாவட்டத்தில் உள்ள சாக்கியா எனும் கிராமப்புற பல்வேறு நெல் வகையிலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். நீர்சூழ்ந்த மற்றும் தாழ்வான நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், குட்டையாகவும் மற்றும் தடித்தும் வெண்ணிறத்தில் காணப்படுகிறது. 135 சென்டிமீட்டர் (135 cm) உயரமாக வளரக்கூடிய இந்த நெற்பயிர், ஒரு எக்டேருக்கு சுமார் 2500 - 3000 கிலோ (25-30 Q/ha) மகசூல் தரவல்லது. மேலும் இந்நெல் இரகம், வட இந்திய பகுதியான உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties: Page 1 - 47. Chakia-59". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-20.