சான்யே 4

(சாங்'இ 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சான்யே 4 (Chang'e 4, எளிய சீனம்: 嫦娥四号பின்யின்: Cháng'é Sìhào) சீனாவின் நிலவு ஆராய்ச்சித் திட்டம் ஆகும். இதன் மூலம் சீனா நிலவின் காணப்படாத இன்னொரு பாகத்தில் தரையிறங்கி சாதனை செய்துள்ளது.[1][2] இத்திட்டம் சான்யே 3 திட்டத்தின் தொடர்ச்சி ஆகும். சான்யே 3 சீனாவின் முதல் நிலவில் தரையிறங்கும் திட்டம் ஆகும். சான்யே என்பது சீனாவின் நிலவுக் கடவுளின் பெயர் ஆகும்.

சான்யே ஒரு பார்வை

தொகு

சான்யே 1 2007, சான்யே 2 2010, சான்யே 3 2013 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது. சான்யே 4 ஐத் தொடர்ந்து சான்யே 5, சான்யே 6 திட்டங்களும் உள்ளன. நிலவின் ஆராயப்படாத பகுதியின் கலவை, வயது போன்றவற்றை அறிய இத்திட்டம் வழி செய்கிறது.

குறிக்கோள்

தொகு

பழங்காலத்தில் ஏற்பட்ட ஒரு மோதல் காரணமாக நிலவில் ஒரு எயிட் கன் பேசின் (Aitkan Basin) என்கிற பெரும்பள்ளம் தோன்றியுள்ளது.இதன் ஆழம் 13 கி.மீ.இதனை ஆராய்வதின் மூலம் நிலவின் பிறப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றை அறிந்து கொள்ளவும்,

நிலவின் மண் மற்றும் பாறைகளின் வேதியியல் கலவைகளை அறியவும்,

நிலவன் பரப்பு வெப்ப நிலையை அறியவும்,

காஸ்மிக் கதிர்கள் பற்றி அறியவும் இத்திட்டம் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lyons, Kate. "Chang'e 4 landing: China probe makes historic touchdown on far side of the moon" (in en). The Guardian இம் மூலத்தில் இருந்து 3 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190103043232/https://www.theguardian.com/science/2019/jan/03/china-probe-change-4-land-far-side-moon-basin-crater. பார்த்த நாள்: 3 January 2019. 
  2. "China successfully lands Chang'e-4 on far side of Moon". Archived from the original on 3 January 2019. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்யே_4&oldid=3993528" இலிருந்து மீள்விக்கப்பட்டது