சாட்சியாபுரம்

சாட்சியாபுரம் (Satchiyapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில், சிவகாசி நகரின் மேற்கே புதிய குடியிருப்பு பகுதியாக அமைந்துள்ளது. சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் சிவகாசி நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது.[1] கி.பி.1864-ல் மேலைநாட்டு கிறித்துவ சமய தொண்டர்கள், இங்கு தங்களுக்கான புதிய குடியிருப்புக்களை உருவாக்கி தங்கி சமயத் தொண்டாற்றினர். இவர்களில் முதன்மையானவர்கள் த. கெ. ராக்லாண்ட் மற்றும் மெடோசு ஆகியோர் ஆவர். இவர்களில் மெடோசு இங்கிலாந்தில் தனது சொந்த ஊரின் நினைவாக இப்புதிய குடியிருப்புக்கு ஆங்கிலத்தில் விட்னசகாம் என்பதனை சாட்சியாபுரம் என மொழி பெயர்ப்பு செய்து, பெயர் சூட்டினார்.[2]

முக்கிய இடங்கள் தொகு

  1. சி. எஸ். ஐ. செவித்திறன் குறைவுடையோர் உயர் நிலைப்பள்ளி, எல்வின் நிலையம்
  2. சி. எஸ். ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி, எல்வின் நிலையம்
  3. சி. எஸ். ஐ.தொடக்கப்பள்ளி, வடக்கு சாட்சியாபுரம்
  4. சி. எம். எஸ். நடு நிலைப்பள்ளி
  5. எஸ். சி. எம். எஸ். பெண்கள் மேனிலைப்பள்ளி
  6. வட்டாட்சியர் அலுவலகம்
  7. ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
  8. கோட்டாட்சியர் அலுவலகம்
  9. வணிக வரித்துறை அலுவலகம்
  10. மகளிர் காவல் நிலையம்
  11. ஆயுதப் படை நிலையம்
  12. சிறுவர் பூங்கா
  13. தொடருந்து நிலையம்
  14. காவலர் குடியிருப்பு
  15. அரசு ஊழியர் காலனி
  16. ஸ்டேட் பேங்க் காலனி
  17. ஆசிரியர் காலனி
  18. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

மேற்கோள்கள் தொகு

  1. https://codepin.in/satchiyapuram-sivakasi-tamil-nadu-pin-code
  2. "About Us". St.MARK'S CHURCH SATCHIYAPURAM. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாட்சியாபுரம்&oldid=3799040" இலிருந்து மீள்விக்கப்பட்டது