சாதி கௌர் அணை

பாக்கித்தானில் உள்ள ஓர் அணை

சாதி கௌர் அணை (Shadi Kaur Dam) பாக்கித்தானின் பலுசிசுத்தான் மாகாணத்தில் உள்ள பாசுனிக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் சாதி கௌர் ஆற்றின் மீது அமைந்துள்ளது. இந்த அணை 485 மீட்டர்கள் (1,591 அடிகள்) நீளம் கொண்டது. [1] 2003 ஆம் ஆண்டு 45 மில்லியன் பாக்கித்தான் ரூபாய் ($758,853) செலவில் அருகிலுள்ள பண்ணைகளுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்காக கட்டப்பட்டது. சாதிக்கோர் அணை என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் அணை உடைந்தது, இதன் விளைவாக சுமார் 70 கிராம மக்கள் நீரில் மூழ்கி அரபிக்கடலில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தனர். பாக்கித்தான் இராணுவத்தின் அவசரகால தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் சுமார் 1,200 பேரின் உயிரைக் காப்பாற்றின. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Shakidor Dam burst Shakidor Dam". UNOSAT. 2005. Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
  2. "54 dead, hundreds missing after dam burst in Pakistan". USA Today. 2005-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.}}

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதி_கௌர்_அணை&oldid=3537603" இலிருந்து மீள்விக்கப்பட்டது