சாத்தனார் (புலவர்)

சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது குறுந்தொகை 349-ஆம் பாடல்.

சாத்தன் என்னும் சொல் எருதையும் குறிக்கும். எருது வடிவில் இருக்கும் தெய்வத்தையும் குறிக்கும். இப்புலவர் பெயர் தெய்வப் பெயர்.

  • திணை - நெய்தல்

பாடல் சொல்லும் பொருள் தொகு

தலைவன் பரத்தையிடம் இருந்துவிட்டு வீடு திரும்புகிறான். தோழி தலைவனை ஏற்றுக்கொள்ளலாம் என்கிறாள். தலைவி அவரை ஏற்றுக்கொள்வதை விட உயிரை விடுவது துன்பமா? என்று கேட்கிறாள்.

கொடுத்ததைத் தா - எனல் தொகு

துன்புற்ற ஒருவன் இருப்பவன் ஒருவனிடம் உதவி புரியுமாறு இரந்தான். இருப்பவன் இரப்பவனின் துன்பத்தைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் துன்புறுவோன் வேண்டியதை நல்கினான். அதைக்கொண்டு இரந்தவன் தன் துன்பத்தைப் போக்கிக்கொண்டான். ஆனால் கொடுத்தவன் வாங்கியவனிடம் தான் கொடுத்ததைத் திரும்பக் கேட்டான். வாங்கியவனால் திருப்பித் தர முடியவில்லை. வாங்கியவன் திருப்பித் தர முடியாத நிலையில் தன் உயிரை விட்டுவிடத் துணிவது நல்லதல்லவா?

இந்தப் பாடலில் தலைவன் கொடுத்தவன். தலைவி வாங்கியவள். தலைவன் பரத்தையிட்ம் சென்று வந்த பின்னும் தான் தலைவிக்குக் கொடுத்த இன்பத்தை இன்னும் திருப்பிக் கேட்கிறான். இந்த நிலையில் தனக்கு உயிர் பெரிதா - என்கிறாள் தலைவி.

தலைவி ஒழுக்கத்தைப் பெரிதாக மதிக்கிறாள்.

உள்ளுறை தொகு

தலைவன் தண்ணந் துறைவன். அவனது துறையில் நாரை மீனைப் பிடித்து அருந்துகிறது. மீனைப் பிடிக்கும்போது துறையில் பூத்திருக்கும் அடும்புப் பூவைச் சிதைக்கிறது. அப்படிப்பட்ட துறையின் தலைவன் அவன். (தலைவன் - நாரை, தலைவி - மீன், பரத்தை - அடும்பு)

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தனார்_(புலவர்)&oldid=3179190" இலிருந்து மீள்விக்கப்பட்டது