சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதி
சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பரவூர் நகராட்சி, கொல்லம் வட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சாத்தன்னூர், சிறக்கரை, பூதக்குளம், கல்லுவாதுக்கல் ஆகிய ஊராட்சிகளையும், கொட்டாரக்கரை வட்டத்தில் உள்ள பூயப்பள்ளி ஊராட்சியையும் கொண்டுள்ளது.[1]