சாந்தி கோஷ்
சாந்தி கோஷ் [1] 22 நவம்பர் 1916 - 1989 ) என்பவர் இந்திய தேசியவாதியாவார். இவர் தன் 15 வயதில் சுனிதி சௌத்ரியுடன் இணைந்து பிரித்தானிய மாவட்ட நீதிபதியைக் கொலை செய்து [1][2][3] ஆயுதமேந்திய புரட்சிகரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அறியப்பட்டார்.[2]
சாந்தி கோஷ் Santi Ghose | |
---|---|
பிறப்பு | 22 நவம்பர் 1916 இந்தியா, கல்கத்தா |
இறப்பு | 1989 |
படித்த கல்வி நிறுவனங்கள் | வங்காளி மகளிர் கல்லூரி |
அறியப்படுவது | தன் 15ஆம் வயதில் பிரித்தானிய மாவட்ட நீதிபதியைக் கொன்றதற்காக |
ஆரம்ப வாழ்க்கை
தொகுசாந்தி கோஷ் 1916 நவம்பர் 22 அன்று இந்தியாவின், கல்கத்தாவில் பிறந்தார்.[2] இவரது தந்தையான தீபேந்திரநாத் கோஷ் தேசியவாதியும், கிழக்கு வங்காளம், கெமில்லாவில் இருந்த விக்டோரியா கல்லூரி மெய்யியல் பேராசிரியருமாவார்.[2]
1931 ஆம் ஆண்டு, சாத்ரி சங்கத்தின் (பெண் மாணவர் சங்கம்) நிறுவன உறுப்பினராகவும் அதன் செயலாளராகவும் சாந்தி இருந்தார்.[2] கோமிலாவில் இருந்த ஃபயிசுனிசா மகளிர் பள்ளி மாணவியான பிரொஃபுலானந்தினி பிரம்மா என்பவரின் ஊக்கத்தால் யுகாந்தர் கட்சியில் சாந்தி இணைந்தார்.[2] இது புரட்சிகர போராளி இயக்கமாகும். இது பிரித்தானிய காலனிய ஆட்சியை அகற்றுவதற்காக கொலை செய்வதை ஒரு அரசியல் நுட்பமாக பயன்படுத்தப்படுத்தக்கூடியது ஆகும்.[4] இவர் தற்காப்புக்காக வாள் பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி ஆகியவற்றைப் பெற்றார்.[2]
சார்லஸ் ஸ்டீவன்ஸ் படுகொலை
தொகு14 திசம்பர் 1931 அன்று 15 வயது சாந்தி கோசும், 14 வயது, சுனிதி சௌதிரியும் வங்காளத்தின் கொமில்லா மாவட்ட நீதிபதியான சார்லஸ் ஸ்டீவன்சின் அலுவலகத்திற்கு வந்தனர். நீதிபதி கிருஸ்துமஸ்சுக்காக பிரிட்டனுக்கு செல்லும் முன்னர் அவரைக் கண்டு அவருக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகளை வழங்க விரும்புவதாக கூறி நுழைந்தனர்.[2] இவர்கள் அளித்த சாக்லேட்டுகளை சாப்பிட்ட ஸ்டீவன்ஸ், "இது மிக சுவையாக உள்ளது!" என்றார். இந்நிலையில் சாந்தியும், சுனிதியும் தங்கள் சால்வ்களில் கீழ் மறைத்து வைத்திருந்த தானியங்கி கைத்துப்பாக்கிகளை எடுத்து, "இது எப்படி உள்ளது திரு நீதிபதி அவர்களே?" என்று கேட்டு அவரைச் சுட்டுக் கொன்றனர்.[2]
விசாரணை மற்றும் தண்டனை
தொகுஇதனையடுத்து இந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டு உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.[2] 1932 பெப்ரவரி மாதம், சாந்தி கோஷ் மற்றும் சுனினி சௌத்ரி ஆகியோர் கல்கத்தா நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.[4][5] ஒரு நேர்காணலில், "ஒரு குதிரைக் கொட்டடியில் வாழ்வதை விட இறப்பது நல்லது." எனக் குறிப்பிட்டன்னர் [4][5] தனக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படாததால், தான் தியாக ஆக இயலவில்லை என ஏமாற்றம் அடைந்ததாக சாந்தி குறிப்பிட்டார்.[2]
சிறைச்சாலையில் அவமானம், உடல் ரீதியான கொடுமை ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்ட சாந்தி, "இரண்டாம் வகுப்பு கைதி"யாக இருந்தார்.[2] ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் ஆங்கிலேய அரசுடன் காந்தி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 1931இல் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.[2]
பிற்கால வாழ்க்கையும் மரணமும்
தொகுசாந்தி தன் விடுதலைக்குப் பிறகு, வங்காளி மகளிர் கல்லூரியில் பயின்றார். மேலும் இந்தியப் பொதுவுடமை இயக்கத்தில் கலந்துகொண்டார்.[2] பின்னர் இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[2] சாந்தி 1942 இல், பேராசிரியர் சித்ரஞ்சன்தாசை மணந்தார்.[2] 1952-62 மற்றும் 1967-68ல் மேற்கு வங்க சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.[2] 1962-64இல் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[2] அருண் பஹ்னி என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி, வெளியிடுள்ளார் .[2]
1989 இல் சாந்தி கோஷ் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Forbes, Geraldine. Indian Women and the Freedom Movement: A Historian's Perspective.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 Smith, Bonnie G. (2008). The Oxford Encyclopedia of Women in World History. Oxford University Press, USA. pp. 377–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-514890-9.
- ↑ Smith, Bonnie G. (2005). Women's History in Global Perspective, Volume 2. University of Illinois Press.
- ↑ 4.0 4.1 4.2 The Bangladesh Reader: History, Culture, Politics.
- ↑ 5.0 5.1 "INDIA: I & My Government". http://content.time.com/time/magazine/article/0,9171,743094,00.html.