சாந்தி லால் சாப்லாட்

இந்திய அரசியல்வாதி

சாந்தி லால் சாப்லாட் (Shanti Lal Chaplot) என்பவர் இந்தியாவின் ராஜஸ்தானின் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆவார். இவர் 7 ஏப்ரல் 1995 முதல் 18 மார்ச் 1998 வரை இப்பதவியிலிருந்தார்.

சாந்தி லால் சாப்லாட்
ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
1995 - 1998
முன்னையவர்அரி சங்கர் பாப்ரா
பின்னவர்சாம்ராத் லால் மீனா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

இவர் 2 மார்ச் 1946 அன்று உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சன்வாட்டில் ஸ்ரீ சுனிலால் சாப்லாட்டுக்கு மகனாகப் பிறந்தார். உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மவ்லியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார்.[1] மேலும் உதய்பூரிலிருந்து 12வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டிற்கான "சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருதை" இவர் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Former Speakers of Rajasthan Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 2009-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_லால்_சாப்லாட்&oldid=3440720" இலிருந்து மீள்விக்கப்பட்டது