சாந்தோகோனைட்டு
சல்போவுப்பு கனிமம்
சாந்தோகோனைட்டு (Xanthoconite) என்பது Ag3AsS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்போவுப்புக் கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.
சாந்தோகோனைட்டு Xanthoconite | |
---|---|
மொராக்கவோவில் கிடைத்த சாந்தோகோனைட்டு கனிமம் | |
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்புக் கனிமம் |
வேதி வாய்பாடு | Ag3AsS3 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 494.72 கி/மோல் |
நிறம் | சிவப்பு ஆரஞ்சு;எலுமிச்சை மஞ்சள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவசு |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5–3.0 |
மிளிர்வு | விடாப்பிடியான ஒளிர்வு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் – ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 5.54, வீச்சு 5.5–5.6 |
மேற்கோள்கள் | [1][2] |
ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் பட்டக உருவத்தில் படிகமாகும் சாந்தோகோனைட்டு எலுமிச்சை மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் ஒளிபுகா கனிமமாகத் திகழ்கிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாந்தோகோனைட்டு கனிமத்தை Xcn[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Xanthoconite mineral data from Webmineral
- ↑ Mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.