சான்போர்ணைட்டு

பைலோசிலிக்கேட்டு கனிமம்

சான்போர்ணைட்டு (Sanbornite) என்பது Ba(Si2O5) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பேரியம் பைல்லோசிலிக்கேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்றது முதல் வெண்மை நிறம் கொண்டதாகக் காணப்படுகிறது. நேர்ச்சாய்சதுரப் படிகமான இதன் கடினத்தன்மை மதிப்பு மோவின் அளவுகோலில் 5 ஆக மதிப்பிடப்படுகிறது. ஒப்படர்த்தி அளவு 3.74 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

சான்போர்ணைட்டு
Sanbornite
சான்போர்ணைட்டு (வெண்மை) செல்சியன் (சாம்பல்) கனிமத்துடன்—இங்கிளைன், மாரிபோசா மாகாணம், கலிபோர்னியா
பொதுவானாவை
வகைபைல்லோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுBa(Si2O5)
இனங்காணல்
மோலார் நிறை273.50 கி/மோல்
நிறம்நிறமற்றது, வெண்மை
படிக இயல்புதட்டையான அடுக்குகள்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்புசரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுபளபளப்பானது
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைTransparent to translucent
ஒப்படர்த்தி3.74
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.597, nβ = 1.616, nγ = 1.624
இரட்டை ஒளிவிலகல்δ = 0.0270
நிறப்பிரிகைபலவீனமானது
மேற்கோள்கள்[1][2]

1932 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் மாரிபோசா மாகாணத்தின் இங்கிளைன் பகுதியில் சான்போர்ணைட்டு கண்டறியப்பட்டது.[3] 1862 முதல் 1936 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த கனிமவியலாளர் பிராங் பி சான்போர்ன் நினைவாக கனிமத்திற்கு சான்போர்ணைட்டு எனப் பெயரிடப்பட்டது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சான்போர்ணைட்டு கனிமத்தை Sabn[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sanbornite: Sanbornite mineral information and data
  2. Sanbornite Mineral Data
  3. Rogers, A.F. (1932) Sanbornite, a new barium silicate mineral from Mariposa County, California. Amer. Mineral., 17, 161–172
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்போர்ணைட்டு&oldid=4136775" இலிருந்து மீள்விக்கப்பட்டது