சான் மறுசீராக்கல்

சான் மறுசீராக்கல் (Chan rearrangement) என்பது அசைலாக்சி அசிட்டேட்டை (1) ஒரு வலிமையான காரத்தின் முன்னிலையில் 2-ஐதராக்சி-3-கீட்டோ-எசுத்தராக (2) மாற்றக்கூடிய வேதியியல் வினையாகும் [1].

சான் மறுசீராக்கல்
சான் மறுசீராக்கல்

இச்செயல்முறையை மறுகண்டுபிடிப்பு மூலம் ஆல்டன் டாக்சால் ஒட்டுமொத்த தொகுப்பு வினையில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது [2].

வினைவழிமுறை

தொகு

வினைபடு பொருளில் இருக்கும் மெத்திலீன் பாலத்துடன் அடுத்துள்ள கார்போனைல் மற்றும் அசிட்டைல் பதிலீட்டுப் பொருட்கள் அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன. ஆல்டால் வினையைப் போல இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு அல்லது ஈரைசோபுரோப்பைலமீடு போன்ற வலிமையான அணுக்கரு கவராத காரங்களால் இவற்றிலிருந்து புரோட்டான்நீக்கம் செய்ய முடியும். உருவாகும் ஈனோலேட்டு, அசிட்டைல் தொகுதியின் அடுத்துள்ள கார்பனைல் உடன் குறுகிய கால இடைநிலை ஆக்சிரேன் வழியாக அணுக்கருகவர் அசைல் பதிலீட்டை அளிக்கிறது. அமிலத்தன்மையால் தனித்த ஐதராக்சில் தொகுதி வெளியேறுகிறது

 
The mechanism of the Chan rearrangement

.

மேற்கோள்கள்

தொகு
  1. ^ Rearrangement of α-acyloxyacetates into 2-hydroxy-3-ketoesters S. D. Lee, T. H. Chan, and K. S. Kwon Tetrahedron Lett. 1984, 25, 3399-3402. (எஆசு:10.1016/S0040-4039(01)91030-5)
  2. ^ First total synthesis of taxol 1. Functionalization of the B ring Robert A. Holton, Carmen Somoza, Hyeong Baik Kim, Feng Liang, Ronald J. Biediger, P. Douglas Boatman, Mitsuru Shindo, Chase C. Smith, Soekchan Kim, et al.; J. Am. Chem. Soc. 1994, 116(4), 1597-1598. (எஆசு:10.1021/ja00083a066)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_மறுசீராக்கல்&oldid=2747880" இலிருந்து மீள்விக்கப்பட்டது