சான் மாநிலத்தின் கொடி

கொடி

பிப்ரவரி 12, 1947 இல் கையெழுத்திடப்பட்ட பாங்லாங் ஒப்பந்தத்தின் விதிகளில் ஒன்றாக சான் மாநிலத்தின் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது, இது மியான்மரின் சுதந்திரத்திற்கான மிக முக்கியமான படியாகும்.


சான் மாநிலம்
அளவு 1:2
ஏற்கப்பட்டது 12 பிப்ரவரி 1947
வடிவம் மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களால் ஆன முந்நிறப்பட்டையும் நடுவில் ஒரு வெள்ளை வட்டமும்

கொடி மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களிலான, கிடைமட்டமான மூன்று பட்டைகளைக் கொண்டதாகும், மையத்தில் ஒரு வெள்ளை வட்டம் உள்ளது. மஞ்சள் பெளத்த மதத்தைக் குறிக்கிறது, இது பெரும்பான்மையான சான் மக்களால் பின்பற்றப்படுகிறது. பச்சை நிறமானது ஷான் மாநிலத்தில் வளமான விவசாய நிலத்தை குறிக்கிறது, சிவப்பு என்பது சான் மக்களின் துணிச்சலைக் குறிக்கிறது மற்றும் வெள்ளை வட்டம் சந்திரனைக் குறிக்கிறது. இது சான் மக்களின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான நம்பிக்கையை குறிக்கிறது.[1] வேறு சில விளக்கங்கள் மஞ்சள் ஒரு துறவியின் அங்கியின் நிறத்தையோ அல்லது அறுவடையின் போது ஒரு நெல் வயலின் நிறத்தையோ குறிக்கிறது என்று கூறுகின்றன. [2]

குறிப்புகள்

தொகு
  1. "About Shan". Shan Culture Association - UK. பார்க்கப்பட்ட நாள் September 6, 2015.
  2. "Shan State (Myanmar)". www.crwflags.com. பார்க்கப்பட்ட நாள் 22 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_மாநிலத்தின்_கொடி&oldid=3886231" இலிருந்து மீள்விக்கப்பட்டது