சாப்பாட்டறை
சாப்பாட்டறை அல்லது உணவறை (dining room) என்பது வீடுகளில் அல்லது பிற தொடர்பான கட்டிடங்களில் உணவு உட்கொள்வதற்காக வடிவமைக்கப்படும் அறை ஆகும். எல்லா வீடுகளிலும் சாப்பாட்டுக்குத் தனியான அறை இருப்பதில்லை. சில வீடுகளில் சாப்பாட்டு மேசைக்கான இடம் ஒதுக்கப்பட்டிருப்பது உண்டு. பெரிய வீடுகளில் தனியான சாப்பாட்டறை இருக்கும்.[1][2][3]
சாப்பாட்டறையும் தொடர்புள்ள பிற பகுதிகளும்
தொகுதற்கால வடிவமைப்பு முறைகளின்படி சாப்பாட்டறை வரவேற்பறை அல்லது இருக்கையறையோடு ஒட்டியதாக அல்லது அவற்றுக்கு அருகில் அமைந்திருக்கும். பயன்பாட்டு வசதிக்காக சமையலறையையும் சாப்பாட்டறையுடன் தொடர்புடையதாக அதற்கு அருகில் அமைப்பது வழக்கம். சில சாப்பாடறைகளுக்குத் தொடர்பாக கைகழுவதற்குத் தனியான இடமும், கழிப்பறையும் இருப்பதுண்டு.
சாப்பாட்டறையின் அளவு
தொகுசாப்பாட்டறையின் அளவு பொதுவாக சாப்பாட்டு மேசையின் அளவில் தங்கியிருக்கும். ஒரேநேரத்தில் இருந்து சாப்பிடவேண்டியவர்களின் எண்ணிக்கையின் அளவுக்கு ஏற்பவே சாப்பாட்டு மேசையின் அளவு அமையும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Halle, David (1993). Inside Culture: Art and Class in the American Home. Chicago: University of Chicago Press. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-31367-0. பார்க்கப்பட்ட நாள் September 10, 2021.
- ↑ Pingel, Maile (September 13, 2021). "The Dining Room Is Back". The Washington Post. https://www.washingtonpost.com/magazine/2021/09/13/dining-room-future-pandemic/.
- ↑ Living and Learning in Home Economics (in ஆங்கிலம்). Rex Bookstore, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-971-23-1386-8.