சாம்சோனைட்டு
சாம்சோனைட்டு (Samsonite) என்பது Ag4MnSb2S6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மாங்கனீசு ஆண்டிமனி சல்போவுப்புக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஒரு பொதுவான மெல்லிய கதிர்வீச்சுடன் ஒற்றைச்சரிவச்சுப் பட்டக அமைப்பில் இது படிகமாகிறது. உலோகக் கருப்பு முதல் எஃகு கருப்பு வரை பிளவு இல்லாமல் நொறுங்கும் தன்மையுடன் சங்குருவத்தில் காணப்படுகிறது. மெல்லிய துணுக்குகளில் பிரதிபலிக்கப்பட்ட ஒளியில் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் தோன்றும். சிவப்பு நிற கோடுகளையும் கொண்டிருக்கும். மென்மையான இக்கனிமம் மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2.5 என்ற அளவையும் ஒப்படர்த்தி 5.51 என்ற அளவையும் பெற்றுள்ளது.
சாம்சோனைட்டு Samsonite | |
---|---|
செருமனியின் ஆர்சு மலைகள் பகுதியிலுள்ள வெள்ளிச் சுரங்கத்தில் கிடைத்த சாம்சோனைட்டு | |
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்பு கனிமம் |
வேதி வாய்பாடு | Ag4MnSb2S6 |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 2 1⁄2 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 5.461 (calculated) |
மேற்கோள்கள் | [1][2][3] |
செருமனி நாட்டின் ஆர்சு மலைகள் பகுதியிலுள்ள சாம்சன் வெள்ளிச் சுரங்கத்தில் கண்டறியப்பட்ட காரணத்தால் 1910 ஆம் ஆண்டில் இது முதன்முதலில் சாம்சோனைட்டு என்று பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- Palache, C., H. Berman, and C. Frondel (1944) Dana's system of mineralogy, (7th edition), v. I, pp. 393–395