சாம்பிராணி
சாம்பிராணி அல்லது குமஞ்சம் என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் ஆகும். பாஸ்வெல்லியா செர்ராட்டா (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மிக மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுமுடைய சாம்பிராணியாக மாறுகிறது.

சாம்பிராணி, குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை, பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இச்சாம்பிராணியை எரித்தால் மிகுந்த மணத்தைப் பரப்பும். சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது. சாம்பிராணி மரம் உறுதியானது. எனினும் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும். ஆண்டு ஒன்றிற்கு 1 கி.கி வரையில் ஒரு மரத்திலிருந்து சாம்பிராணி பெற முடியும்.
பயன்பாடு
தொகுபண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவத்திற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது
வேதியியல் உள்ளடக்கம்
தொகுசாம்பிராணியில் காணப்படும் சில வேதியியல் கூறுகள்:
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Olibanum.—Frankincense". Henriette's Herbal Homepage. www.henriettes-herb.com. Retrieved 2009-01-14.
- ↑ 2.0 2.1 2.2 "Farmacy Query". www.ars-grin.gov. Archived from the original on 2004-11-10. Retrieved 2009-01-14.