சாம்ப்ஸ் லையீஸ் தாக்குதல், ஜூன் 2017
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் காவலர்களின் வாகனத்தின் மீது ஆயுதங்களைக் கொண்ட மற்றொரு வாகனத்தினை மோதித் தாக்குதல் நடத்தப்பட்டது. 19 ஜூன் 2017 அன்று நடைபெற்ற இத்தாக்குதலில் தாக்குதல்தாரி கொல்லப்பட்டார். இசுலாமிய அரசு இத்தாக்குதலுக்கு உடனடியாகப் பொறுப்பேற்றுக்கொண்டது.
சாம்ப்ஸ் லையீஸ் தாக்குதல், ஜூன் 2017 | |
---|---|
இடம் | சாம்ப்ஸ் லையீஸ், பாரிஸ் |
நாள் | 19 ஜூன் 2017 பிற்பகல் 3:40 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | பாதுகாப்புப்படையினர் |
தாக்குதல் வகை | தாக்கிவிட்டு ஓடுதல் |
ஆயுதம் | மகிழுந்து |
இறப்பு(கள்) | 1 (தாக்குதல்தாரி) |
தாக்கியோர் | தியாசிரி ஆதம் லோத்ஃபி (Djaziri Adam Lotfi) |
பின்புலம்
தொகுபிரான்ஸ் நாட்டின் காவலர்களை ஜிகாதிகள் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்துகின்றனர். 2012 முதல் 2017 வரை 17 முறை இம்மாதிரியான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.[1] காவலர்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீதான இம்மாதிரியான தாக்குதல்களை இசுலாமிய அரசு தீவிரவாத அமைப்பு ஊக்குவிக்கிறது.[2][3] 2015 முதல் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் பிரான்ஸ் நாட்டில் 239 பேர் கொல்லப்பட்டுனர்.
தாக்குதல்
தொகுஉள்ளூர் நேரப்படி 15:40 மணிக்கு காவல் வாகன ரோந்தினூடே தாக்குதல்தாரி தனது வாகனத்தைச் செலுத்தியதன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தாக்குதல்தாரியின் வாகனம் உடனடியாகத் தீப்பற்றிக் கொண்டது.[4] அவ்வாகனத்தில் ஆ.கே 47 வகைத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் வாயு உருளைகள் இருந்தன.[5] The attack vehicle also contained a quantity of explosives sufficient to "blow this car up."[6] தாக்குதல்தாரி இந்நிகழ்வில் கொல்லப்பட்டார்.
தாக்குதல்தாரி
தொகுபிரான்ஸ் காவல் துறையினரால் 31 வயதுடைய தியாசிரி ஆதம் லோத்ஃபி (Djaziri Adam Lotfi) எனும் தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டார்.[7] இவர் வட பிரான்ஸைச் சார்ந்தவராவார். இவரின் உறவினர்கள் நால்வரை காவல் துறையினர் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
கருத்துகள்
தொகுமீண்டுமொருமுறை நமது பாதுகாப்புப்படையினர் குறிவைக்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரார்டு கூலும்ப் (Gerard Collomb) தெரிவித்துள்ளார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Timeline: How jihadists have targeted soldiers and police in France" (in en). The Local. 6 June 2017. https://www.thelocal.fr/20170606/islamist-attacks-against-police-and-soldiers-in-france. பார்த்த நாள்: 8 June 2017. "February 3rd, 2017: A man pulled out two machetes and attacked one of the soldiers standing guard at the entrance to the underground Carrousel du Louvre shopping centre, which is next to the world famous art gallery. Soldiers tried to fight him off with close contact but were unable to contain him. They then opened fire."
- ↑ "Feds Warn of ISIS-Inspired Threat Against Police, Reporters in US". NBC News. 13 October 2014. http://www.nbcnews.com/storyline/isis-terror/feds-warn-isis-inspired-threat-against-police-reporters-us-n224826. பார்த்த நாள்: 8 June 2017.
- ↑ "European terror attacks increasingly targeting police, security forces". Fox News. 21 April 2017. http://www.foxnews.com/world/2017/04/21/european-terror-attacks-increasingly-targeting-police-security-forces.html. பார்த்த நாள்: 8 June 2017.
- ↑ Bredeen, Aurelein (19 June 2017). "Armed Man Is Killed After Driving Into Police Convoy on Champs-Élysée". New York Times. https://www.nytimes.com/2017/06/19/world/europe/paris-champs-elysees-car.html?mcubz=2&_r=0. பார்த்த நாள்: 20 June 2017.
- ↑ Henley, Jon (19 June 2017). "Champs Élysées: driver dead as car carrying firearms rams police van". The Guardian. https://www.theguardian.com/world/2017/jun/19/champs-elysees-sealed-off-car-hits-police-van-paris. பார்த்த நாள்: 19 June 2017.
- ↑ "Champs-Elysees attack car 'had guns and gas' - Paris police". BBC. 20 June 2017. http://www.bbc.com/news/world-europe-40332532. பார்த்த நாள்: 20 June 2017.
- ↑ "Paris: Mutmaßlicher Attentäter rammt Polizeiwagen auf Champs-Élysées" (in de-DE). Die Zeit. 2017-06-19. http://www.zeit.de/gesellschaft/zeitgeschehen/2017-06/paris-polizeiwagen-grosseinsatz-champs-elysees.
- ↑ "Champs-Elysees attacker dead, car contained ‘number of firearms and explosives’ (PHOTOS, VIDEOS)". RT International. https://www.rt.com/news/393074-armed-police-france-paris/. பார்த்த நாள்: 19 June 2017.