இம்பூறல்
(சாயவேர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இம்பூறல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Rubiaceae
|
பேரினம்: | Oldenlandia
|
இனம்: | O. umbellata
|
இருசொற் பெயரீடு | |
Oldenlandia umbellata L. |
இம்பூறல் அல்லது சாயவேர் அல்லது சிறுவேர் அல்லது இன்புறாவேர் (chay root அல்லது choy root; Oldenlandia umbellata) என்பது இந்தியாவை தாயகமாகக் கொண்ட ஓர் குறை வளர்ச்சித் தாவரமாகும்.[1] இரண்டு வருடத் தாவரத்தின் வேர்த் தோலிலிருந்து சிவப்பு சயத்தை எடுக்க முடியும். முன்னர், இதன் வேர்ச் சாயம் சாயமூன்றியுடன் சேர்க்கப்பட்டு பருத்தி, கம்பளி, பட்டு ஆகியவற்றின் சிவப்பு நிற வேலைப்பாடுகளில் பாவிக்கப்பட்டது.[2] இது மூலிகையாகவும் பயன்படுகிறது. இத்தாவரம் இந்தியாவின் கோரமண்டல் கரைகளில் வளர்கிறது.
விளக்கம்
தொகுஇம்பூறலானது மொட்டு அளவில் சிறு மலர்களைக் கொண்ட சின்னஞ் சிறு தாவரம் ஆகும். இது ஈட்டி வடிவச் சிறு இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும் கொண்டிருக்கும். இதில் குயினோன்கள் (Quinones), அலிசாரின் (Alizarin) போன்ற தாவரவேதிப் பொருட்கள் உள்ளன.[3]
உசாத்துணை
தொகு- ↑ "chay root". thefreedictionary. பார்க்கப்பட்ட நாள் 2007-01-15.
- ↑ "The in vitro antibacterial activity of Hedyotis Umbellata – Short Communication". Indian Journal of Pharmacological Sciences. பார்க்கப்பட்ட நாள் 2007-01-15.
- ↑ டாக்டர் வி.விக்ரம் குமார் (26 சனவரி 2019). "இன்பத்தின் ஆணிவேர் இம்பூறல்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2019.