சாராடைட்டு
சாராடைட்டு (Zaratite) என்பது Ni3CO3(OH)4•4H2O என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பிரகாசமான மரகத பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் நிக்கல் கார்பனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. சம அளவு படிக அமைப்புத் திட்டத்தில் பெருத்தது முதல் தகடுபோல படர்ந்த மார்பு போன்றும் நரம்பு நிரப்பிகள் போன்றும் படிகமாகிறது. இக்கனிமத்தின் ஒப்படர்த்தி அளவு 2.6 என்றும் மோவின் கடினத்தன்மை எண் 3 முதல் 3.5 என்றும் அறியப்படுகிறது. சாராடைட்டின் கட்டமைப்பில் பிளவு ஏதும் இல்லை மற்றும் நொறுங்கினால் சங்குருவான முறிவும் ஏற்படுகிறது. எண்ணெய்ப்பசை முதல் பளபளப்பானவது வரையிலான ஒளிர்வை இது பெற்றுள்ளது.
சாராடைட்டு Zaratite | |
---|---|
தாசுமேனியாவில் கிடைத்த சாராடைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டுகள் |
வேதி வாய்பாடு | Ni3CO3(OH)4•4H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | சம அளவு (படிக உருவமற்றதில்) |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாராடைட்டு கனிமத்தை Zar[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மீக்காரப் பாறைகள் பாம்புப்பாறைகளாக மாற்ரமடையும் காலத்தில் முதன்மையாக நிக்கல் மற்றும் இரும்பு தனிமங்களைக் கொண்டிருக்கும் குரோமைட்டு, பென்ட்லான்டைட்டு, பைரோடைட்டு, மில்லரைட்டு போன்ற கனிமங்கள் மாற்றமடைவதாலும், மேலும் இவை நீரேற்றம் அடைவதாலும் உருவாகும் இரண்டாம்நிலை அரிய கனிமம் சாராடைட்டு ஆகும். NiCO3•6H2O, என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட எல்யெரைட்டு என்ற கனிம இதனோடு தொடர்புடைய கனிமமாகும்.
எசுப்பானியா நாட்டில் உள்ள கலீசியா பகுதியில் இக்கனிமம் 1851 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அந்நாட்டின் அரசியல் நிபுணரும் நாடக ஆசிரியருமான அன்டோனியோ கில் ஒய் சாரேட் (1793–1861) என்பவரின் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது[1][3]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mineral Data Publishing, PDF
- ↑ Webmineral data
- ↑ 3.0 3.1 Mindat with location data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.