சாரா எல்லன் ஆர்டிங்
சாரா எல்லன் ஆர்டிங் எனப்பட்ட எல்லன் ஆர்டிங் பேக்கர் (Ellen Harding Baker) ஓகியோவில் உள்ள கன்னெக்டிகட்டில் 1847 ஜூன் 8 இல் பிறந்தார். இவர் தனது வானியல் விரிவுரைகளில் பயன்படுத்திய சூரியக் குடும்பக் கம்பளி உறை வரைவுக்காகப் பெயர்பெற்றவர்.[1] இவர் தன் வானியல் உரைகளை அயோவா மேற்கு கிளையிலும் மாஸ்கோ மேற்கு கிளையிலும் அயோவா உலோன்டிரீயிலும் ஆற்றியுள்ளார்.[1] இந்தக் கம்பளி உறை வரைவு இப்போது சுமித்சோனிய நிறுவனத்திடம் உள்ளது. நடப்பில் இது பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இது 1876 இல் செய்யப்பட்ட்து. இதன் வடிவமைப்பு அக்கால வானியல் பாடநூல்களில் அமைந்த படவிளக்கத்தைப் போல அமைக்கப்பட்ட்தாகும்.[1] இதில் நடுவில் சூரியன் உள்லது. இதில் எட்டு சூரியக் குடும்பக் கோள்களும் அவை சூரியனைச் சுற்றும் வட்டணைகளுடன் காட்டப்பட்டுள்ளன. இதில் முதன்மை சிறுகோள் பட்டையும் அமைந்துள்ளது. இதில் சூரியக் குடும்பத்துக்கு அப்பால் உள்ள விண்மீன்களும் அமைந்துள்ளன. இதில் புவியின் நிலாவும் வியாழனின் கலீலிய நிலாக்களும் காரிக்கோள், நெப்டியூன், யுரேனசு ஆகிய கோள்களின் எண்ணற்ற நிலாக்களும் காரிக்கோள் வலயங்களும் அமைந்துள்ளன. மையம் பிறழ்ந்த வட்டணையில் ஒரு வால்வெள்ளியும் காட்டப்பட்டுள்ளது. இது 1835 இல் பார்த்த ஆல்லே வால்வெள்ளியாக இருக்கலாம். இந்த உறை 89 x 106 அங்குலங்கள் (225 செமீ x 269 செமீ) அளவு பெரியதாகும்.[1]
எல்லன் மரியோன் பேக்கரை 1867 அக்தோபர் 10 இல் மணந்துகொண்டார். எல்லன் 1886 மார்ச்சு 30 இல் என்புருக்கி நோயால் இறக்கும்போது இவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர்.[1]