சாரா டி. முகோபாத்தியாய்

முனைவர் சாரா டி. சுட்டீவ்ர்ட் முகோபாத்தியாய் (Dr. Sarah T. Stewart-Mukhopadhyay) ஓர் அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் கோள் உருவாக்கம், கோள் நிலவியல், பொருள் அறிவியல் ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர் ஆவார்.[1][2] இவர் தேடிசு கலிபோர்னியா பல்கலைக்கழகப் புவி, கோள் அறிவியல் துறைப் பேராசிரியராக உள்ளார்.[1] இவர் 2003 இல் இருந்து ஆர்வாடு பல்கலைக்கழகப் புவி, கோள் அறிவியல் துறை வருகைதரு பேராசிரியராகவும் உள்ளார்.[3] இவரை மக்கள் அறிவியல் இதழ் அரிய பத்து பேரறிஞர்களில் ஒருவராக அறிவித்துள்ளது. இவரை வானியல் இதழ் வானியலின் எழுச்சி விண்மீன் என 2013 இல் கூறியுள்ளது. கண்டுபிடிப்பு இதழ் இவரை 2015 இல் அரிய 100 அறிவியலாளரில் ஒருவராக அறிவித்தது.[4][5] இவர் அமெரிக்க வானியல் கழகத்தில் இருந்து தன்னிகரற்ற இளம் அறிவியலளர் சதனை விருதைப் பெற்றுள்ளார்.[6]

இளமையும் கல்வியும் தொகு

இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து 1995 இல் வானியற்பியலிலும் இயற்பியலிலும் இளவல் பட்டம் பெற்றார்.[3] She completed her இவர் 2002 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[6]

வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும் தொகு

இவர் ஆர்வார்டு அதிர்ச்சி அமுக்க ஆய்வகத்தின் இயக்குந்ராக உள்ளார்.[3] இவர் கால்டெக்கில், நம் சூரியக் குடும்பச் சூழலில், பனிக்கட்டியில் அதிர்ச்சிப் பரவலை ஆய்வு செய்த முதல் பெண்மணி ஆவார்.[2] இவரது ஆய்வுக்குழு பெருமொத்தல்களிலும் மொத்தல் குழிப்பள்ளங்களிலும் கோள் உருவாக்கம் பற்றி ஆர்வம் கொண்டுள்ளது. இவர் 2009 இல் உரேய் பரிசைப் பெற்றார்.[7] அதிர்ச்சித் தூண்டலால் உருவாகும் பனிக்கட்டி உருகல் ஆய்வு, செவ்வாய் மேற்பரப்பில் இப்போது முனைவாகச் செயல்படும் நிகழ்வு நீர்ம வடிவ நீரின் அரிப்பே என்பதை எடுத்துக்காட்ட உதவியது.[8]

தகைமைகளும் விருதுகளும் தொகு

இவர் 2009 இல்லமெரிக்க வானியல் கழகத்தின் கோள் அறிவியல் பிரிவில் இருந்து அரோல்டு சி. உரேய் பரிசைப் பெற்றார்.[6] இவர் 2001 இல் அமெரிக்க புவியிய்ல் கழகத்தில் இருந்து இசுடீபன் ஈ. துவோர்னிக் கோள் நிலவியல் மாணவர் கட்டுரை விருதைப் பெற்றார்.[9] இவர் 2002 இல் வாழ்சிங்ட்ன், கார்னிகி நிறுவனத்தில் குரோவ் கார்ல் கில்பர்ட் முதுமுனைவர் ஆய்வுநல்கையைப் பெற்று ஆய்வைத் தொடங்கினார். இவர் 2003 இல் அறிவியலாளருக்கும் பொறியிய்லாளருக்குமான குடியரசுத் தலைவரின் தொடக்கநிலை வாழ்க்கைப்பணி விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Sarah T. Stewart | UC Davis Earth and Planetary Sciences". geology.ucdavis.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
  2. 2.0 2.1 "Sarah T. Stewart-Mukhopadhyay Awarded 2009 Harold C. Urey Prize". www.spaceref.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
  3. 3.0 3.1 3.2 "Sarah T. Stewart-Mukhopadhyay". eps.harvard.edu. Archived from the original on 2016-05-21. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  4. "brilliant 10 2010". Popular Science. Archived from the original on 2015-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  5. Karri, Farron (July 2013). "Astronomy's rising stars". Astronomy. 
  6. 6.0 6.1 6.2 "2009 DPS Prize Recipients | Division for Planetary Sciences". dps.aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
  7. "Harold C. Urey Prize in Planetary Science". Division of Planetary Sciences of the American Astronomical Association. பார்க்கப்பட்ட நாள் 2015-01-12.
  8. "2009 DPS Prize Recipients - Division for Planetary Sciences". dps.aas.org.
  9. "GSA Planetary Geology Division | Dwornik Awards". rock.geosociety.org. Archived from the original on 2016-06-16. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_டி._முகோபாத்தியாய்&oldid=3623820" இலிருந்து மீள்விக்கப்பட்டது