சாரா பல்லார்டு

'சாரா பல்லார்டு (Sarah Ballard) (பிறப்பு:1984)[1] ஓர் அமெரிக்க புறவெளிக்கோள் வானியலாளர் ஆவார். இவர் இப்போது மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் தோரெசு நல்கை ஆய்வாளராகவும்[3] பெண் அறிவியலாளருக்கான யுனசுகோவின் உலோரியல் ஆய்வு நல்கை ஆய்வாளராகவும் உள்ளார்.[2] Ballard has been a NASA Carl Sagan Fellow.[1][3]

சாரா ஆழ்சுலே பல்லார்டு
பிறப்பு1984[1] (Age 33: 2017)[2]
துறைபுறவெளிக்கோள் வானியற்பியல்
கல்விவானியற்பியல் கலையிளவல், UC பெர்க்கேலி
வானியல், வானியற்பியல் முனைவர், ஆர்வார்டு (2012)
ஆய்வேடுபுத்துலகங்களைத் தேடி:மூவெளிசார் வான்காணகவழி புறவெளிக் கோள்களின் தேட்டமும் ஆய்வுகளும் (2012)
ஆய்வு நெறியாளர்டேவிடு சார்பொன்னியூ
அறியப்படுவதுகெப்ளர்-19c கண்டுபிடிப்பு (கடப்பு நேர வேறுபாடு வழி கண்டுபிடித்த முதல் புறவெளிக்கோள்)
இணையதளம்
space.mit.edu/~sarahba

இவர் கடப்பு நேர வேறுபாட்டு முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்திய கூட்டாய்வுக் குழுவில் ஒருவராவார். இந்தக் கோட்பாட்டு தேடல் வழிமுறை சரியானது என நிறுவப்பட்டதோடு இம்முறையால் கெப்ளர்-19 கோளமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.[4] கெப்ளர் விண்கலத் திட்டத்தின்கீழ் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு புறவெளிக் கோள்கள் தேட்ட்த்தில் கலந்துகொண்டார். இத்திட்டத்தில் பின்னர் புறவெளி விண்மீன்களினைச் சுற்றிவரும் பல புறவெளிக் கோள்கள் கண்டறியப்பட்டன.

இவர் தனது பாலியல் வன்முறைக்காட்பட்ட பட்டறிவையும் வெளிப்படையாக பேசியுள்ளார்;[5][6][7] மேலும் வன்திணிப்பு மனச்சிக்கல் பற்றியும் மவுனா கீ வான்காணகங்களுக்கான 30 மீ தொலைநோக்கியைக் குறித்த முரண்பாடு குறித்தும் அறிவித்துள்ளார்.

கல்வி

தொகு

ஆய்வாளர் நிலை

தொகு

இவர் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் கார்ல் சாகன் ஆய்வாளராக இருந்தார்.[1][1][3] அங்கு இவர் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டார்; 2015 இல் இவருக்கு மசாசூசட் தொழில்நுட்ப நிறுவணத்தில் முதுமுனைவர் ஆய்வைத் தொடர உலோரியல் முதுமுனைவர் நல்கை நிதி பெண் அறிவியல் முதுமுனைவர் ஆய்வின்கீழ் நல்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 யூடியூபில் Sarah Ballard, "Directions to the Nearest Alien Earth-like Planet", NYU Special [Public] Colloqium, 2013 October 11.
  2. 2.0 2.1 2.2 L'Oréal USA Announces 2015 For Women in Science Fellows, L'Oréal USA, October 13, 2015
  3. 3.0 3.1 3.2 Curriculum vitae: Sarah Ballard (PDF), பார்க்கப்பட்ட நாள் 2015-10-13[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Ballard et al. (31 authors) (2011), The Kepler-19 System: A Transiting   Planet and a Second Planet Detected via Transit Timing Variations, arXiv:1109.1561
  5. http://www.nature.com/news/science-and-sexism-in-the-eye-of-the-twitterstorm-1.18767
  6. http://www.csmonitor.com/USA/Education/2015/1014/Was-UC-Berkeley-too-easy-on-professor-accused-of-sexual-harassment-video
  7. https://www.nytimes.com/2015/10/11/science/astronomer-apologizes-for-behavior.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_பல்லார்டு&oldid=4021059" இலிருந்து மீள்விக்கப்பட்டது