சாரா பித்
சாரா ஜேன் பித் (Sarah Jane Pitt) என்பவர் பிரைட்டன் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலாளர் மற்றும் உயிர்மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சக ஆய்வாளர் ஆவார். பித், தனது இளம் அறிவியல் படிப்பினை இங்கிலாந்தின் பிரிசுடல் பல்கலைக்கழகத்திலும், முதுநிலைப் படிப்பினை லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியிலும், முனைவர் பட்டத்தினை லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். இவர் இங்கிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவின் பிற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் தீநுண்மிகளைக் கண்டறியும் ஆய்வகங்களில் பணியாற்றி உள்ளார். உயிர்மருத்துவ ஆய்வாளர் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் பயிற்சி அளிப்பதில் பித் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார். மேலும் நோயறிதல் ஆய்வகப் பணிகளில் தொழிலைத் தேடும் இளமறிவியல் உயிர்மருத்துவ அறிவியல் மாணவர்களுக்கான உள்ளூர் மருத்துவமனை நோயியல் துறைகளில் மருத்துவ வேலைவாய்ப்புகளை நிர்வகிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். பித், உயிரிமருத்துவ அறிவியல், ஒட்டுண்ணியியல் மற்றும் மருத்துவ நுண்ணுயிரியல் ஆகிய மூன்று புத்தகங்களை ஆய்வக நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்.[1] இவர் தீநுண்மவியல் பிரிவின் தலைமைப் பரிசோதகர் ஆவார்.[2] [3]
பனுவல்கள்
தொகுபித் 1) மருத்துவ மற்றும் மருத்துவ தொழில்முறை பயிற்சியில் உயிர்மருத்துவ அறிவியல்-அறிமுகம் (ஜிம் கன்னிங்காமுடன்) 2) ஒட்டுண்ணியியல்: ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை (ஆலன் கன்னுடன்) 3) நோயறிதல் மற்றும் ஆய்வக அறிவியலருக்கான மருத்துவ நுண்ணுயிரியல் எனும் நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sarah Pitt".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-08-10. பார்க்கப்பட்ட நாள் 2023-02-25.
- ↑ "Laboratory News Podcast with Virologist Dr Sarah Pitt | Laboratory News".
வெளி இணைப்புகள்
தொகு- கோவிட்-19 பற்றி சாரா பிட் பேசுகிறார்
- https://theconversation.com/profiles/sarah-pitt-808299
- Publications by Sarah Pitt