சார்சுவேலா அரண்மனை
சார்சுவேலா அரண்மனை (எசுப்பானியம்: Palacio de la Zarzuela, [paˈlaθjo ðe la θaɾˈθwela]) என்னும் அரண்மனை ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரத்திற்கு அருகில் உள்ளது. இது எல் பார்டோ மலையின் மீது அமைந்துள்ளது. அரச குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட மாட்ரிட்டின் அரண்மனையில் அரச குடும்பத்தினர் தங்குவதில்லை. சார்சுவேலா அரண்மனையில் முதலாம் வான் கார்லோசும், அரசி சோபியாவும், குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். 1963-முதல் இங்கு அரச குடும்பத்தினர் தங்குகின்றனர். எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பும், அரசியும் தங்குமிடமும் வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளன. [1] இது ஸ்பெயின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசரின் அலுவலக அறை, சமையலறை, வரவேற்பறை, விருந்தினர் அறை, படுக்கையறை உள்ளிட்ட பல்வேறு அறைகள் உள்ளன. தொழுகைக் கூடம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. [1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Zarzuela Palace". Hello magazine. http://www.hellomagazine.com/royalty/spain/palace.html. பார்த்த நாள்: 15 January 2009.
இணைப்புகள்
தொகு