சார்ச்சிக்கைட்டு
ஆலைடு கனிமம்
சார்ச்சிக்கைட்டு (Zharchikhite) என்பது AlF(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதுவோர் ஆலைடு வகைக் கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அலுமினியம் என்ற தனிமத்தின் ஐதராக்சில் புளோரைடு என்றும் இது விவரிக்கப்படுகிறது. நிறமற்ற ஒளிபுகும் படிகங்களாக சார்ச்சிக்கைட்டு படிகமாகிறது. 1968 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இக்கனிமம் அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. உருசியாவில் உள்ள பர்யாத்தியா குடியரசின் சார்ச்சிக்கைட்டு படிவுகளில் இக்கனிமம் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
சார்ச்சிக்கைட்டு Zharchikhite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | AlF(OH)2 |
இனங்காணல் | |
படிக இயல்பு | நீட்டிய பட்டக வடிவ பெருத்த படிகங்கள், = |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு, போலி நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | (010) இல் சரிபிளவு |
விகுவுத் தன்மை | எளிதில் நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5 |
மிளிர்வு | பளபளப்பானது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.81 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.532 nβ = 1.552 nγ = 1.567 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.035 |
2V கோணம் | 80° (கணக்கிடப்பட்டது) |
மேற்கோள்கள் | [1][2] |