சார்லசு கூடியர்
சார்லசு கூடியர் (Charles Goodyear) (திசம்பர் 29, 1800 – சூலை 1, 1860) ஒரு அமெரிக்க வேதியியலாளர்[1][2] மற்றும் உற்பத்திப் பொறியாளர் ஆவார். இரப்பர் பற்றவைப்பு என்பதைக் கண்டுபிடித்து அதற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காப்புரிமை மற்றும் வணிகக் குறியீட்டு அலுவலகத்தில் 3633 என்ற காப்புரிமை எண்ணை சூன் 15, 1844 ஆம் ஆண்டில் பெற்றவரும் ஆவார்.[3]
சார்லசு கூடியர் | |
---|---|
சௌத்வொர்த் மற்றும் ஏவ்ஸ் ஆகியோரால் ஒளிப்படமெடுக்கப்பட்ட கூடியர் | |
பிறப்பு | திசம்பர் 29, 1800 நியூ ஹேவென், கனெக்டிகட்டு |
இறப்பு | சூலை 1, 1860 நியூயார்க்கு நகரம் | (அகவை 59)
தேசியம் | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | கிளாரிசா பீச்சர் (திருமணம். ஆகத்து 1824) |
பிள்ளைகள் |
|
பணி | |
குறிப்பிடத்தக்க திட்டங்கள் | இரப்பர் பற்றவைப்பு - கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1839, 1844 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்ற ஆண்டு. |
கையொப்பம் |
கூடியர் நெகிழ்வான, நீர்ப்புகா, வார்ப்படக்கூடிய இரப்பரை உருவாக்கி உற்பத்தி செய்வதற்கான வேதியியல் செயல்முறையை உருவாக்கியவர் ஆவார்.[4]
தாமசு ஆங்காக்கின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு வெப்பப்படுத்தும் போது மேலும் நிலைத்தன்மையுடைய இரப்பரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.[5] இவரது கண்டுபிடிப்பு பல தசாப்தங்களுகு்கான இரப்பர் உற்பத்தியை நௌகாடக் கீழ் பள்ளத்தாக்கில் கனெக்டிகட் என்ற இடத்தில் இரப்பர் உருவாக்கச் செயல்முறையில் காலணி மற்றும் வட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் தொடரச்செய்தது. கூடியர் வட்டை மற்றும் இரப்பர் நிறுவனம் இவரது பெயரால் அழைக்கப்பட்டது.
தொடக்க கால வாழ்க்கை
தொகுசார்லசு கூடியர் நியூ ஏவன், கனெக்டிகட்டில் அமாசா கூடியர் என்பவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு இயந்திரப் பழுது பார்ப்பவர் ஆவார். 1683 ஆம் ஆண்டில், நியூ ஏவன் குடியிருப்புப் பகுதியில், இலண்டன் வணிகர்களின் நிறுவனத்தைத் தொடங்கி, தலைமையேற்று நடத்தி வந்த ஆளுநர் ஈடோன் என்பவரின் ஆலோசகராயும் விளங்கினார்.[6]
1823 ஆம் ஆண்டில், சார்லசு கனரக/வன்பொருள் வணிகத்தைக் கற்றுக்கொள்வதற்காக தனது வீட்டை விட்டு பிலடெல்பியா சென்றார். இயர் தனது இருபத்தைந்தாவது வயது வரை தொழிற்துறையில் பணிபுரிந்துவிட்டு கனெடிகட் திரும்பினார். இவர் நௌகாடக்கின் கனெடிகட்டில் தனது தந்தையின் வணிகத்தில் பங்குதாரராக நுழைந்து தந்தம் மற்றும் உலோக பொத்தான்களையும் மற்றும் பலவிதமான விவசாயத் துணைப்பொருட்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑
Zumdahl, Steven; Zumdahl, Susan (2014). Chemistry (Ninth ed.). Belmont, California: Brookes Cole/Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-133-61109-7. பார்க்கப்பட்ட நாள் October 25, 2014.
However, in 1839 Charles Goodyear (1800 – 1860), an American chemist, . . .
- ↑
Haven, Kendall; Berg, Roni (1999). The Science and Math Bookmark Book:300 Fascinating, Fact-Filled Bookmarks. Englewood, Colorado: Teacher Ideas Press/Libraries Unlimited, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56308-675-1. பார்க்கப்பட்ட நாள் October 25, 2014.
Famous Scientists: Charles Goodyear, chemist.
- ↑ "United States Patent Office" (PDF). Archived from the original (PDF) on July 14, 2015.
- ↑ Hosler, D. (18 June 1999). "Prehistoric Polymers: Rubber Processing in Ancient Mesoamerica". Science 284 (5422): 1988–1991. doi:10.1126/science.284.5422.1988. பப்மெட்:10373117.
- ↑ Slack, Charles (2003). Noble Obsession, 225, Hyperion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7868-8856-3.
- ↑ Iles, George (December 19, 1912). "Leading American Inventors". H. Holt – via Google Books.