சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசு

பல தாவரங்களின் தண்டுகள் மற்றும் வேர்களில் முக்கிய வளர் திசுவாக சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசு உள்ளது, குறிப்பாக இருவித்திலை தாவரங்களான காட்டுப்பருத்தி மற்றும் கருவாலி மரங்கள், விதைமூடாத தாவரங்களான தேவதாரு மரங்கள், அத்துடன் சில சாற்றுக்குழல் தாவரங்கள் ஆகும்..[1]:125 இது இரண்டாம் நிலை சாற்றுக்குழாய் திசுவை உட்புறமாக, உட்சோற்றுத் திசுவை நோக்கியும், மற்றும் இரண்டாம் நிலை உணவுக்கடத்தி திசுவை வெளிப்புறமாக, மரப்பட்டைையை நோக்கியும் உருவாக்குகிறது,[2] சிறு தாவரங்களின் தண்டுகளில் இத்திசுவானது கழுத்தணிகளின் மணிகள் போல இடைவெளி விட்டு அடுக்கப்பட்டிருக்கும். மரங்களில், குழாய் போன்று வேறுபாடற்ற ஆக்குத்திசு செல்களாக உள்ளது, இதிலிருந்து புதிய திசுக்கள் தொடர் வளையங்களாக வளர்கின்றன. வழக்கமான சாற்றுக்குழாய் திசு மற்றும் உணவுக்கடத்தி திசு, போன்று நீர், தாது உப்புக்கள் அல்லது உணவினை இதன் வழியாகக் கடத்துவதில்லை. சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசுவின் வேறு பெயர்களாவன முக்கிய சோற்றுத்திசு, கட்டை சோற்றுத்திசு, அல்லது இருமுக சோற்றுத்திசு என்பவையாகும்.[2]

சூாியகாந்தி தண்டடின் பகுதி, சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசு (F) செல்கள் பிரிக்கப்பட்டு வெளிப்புறத்தில் உணவுக்கடத்தி திசு உருவாக்குகின்றன, இவை சோறு்றுத்திசு கற்றைத் தொப்பி (E), மற்றும் உள்ளே சாற்றுக்குழாய் திசு (D) ஆகியவற்றின் கீழே அமைந்துள்ளது. சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசுவின் பெரும்பகுதி இங்கே சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசு கற்றையாகும். ஆனால் இவை கற்றைகளுக்கிடையில் சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசுவில் சேர ஆரம்பிக்கிறது.

சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசு இருவித்திலை தாவரங்கள் மற்றும் விதைமூடாத தாவரங்களில் மட்டும் தான் காணப்படும், ஒருவித்திலை தாவரங்களில் காணப்படாது, பொதுவாக இதில் இரண்டாம் நிலை வளர்ச்சி இருக்காது. ஒரு சில இருவித்திலை தாவரங்கள் மற்றும் விதைமூடாத தாவரங்களின் இலைகளில் சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசு உள்ளது.[3] இருவித்திலை தாவரங்கள் மற்றும் விதைமூடாத தாவரங்களில், மரக்கட்டையையும் மரப்பட்டையும் பிாிக்கக்கூடிய ஒரு கோடாக அமைவதை வெளிப்படையாகக் காணலாம் இதற்கு பட்டை சோற்றுத்திசு எனப்படுகிறது.[4]

அமைப்பு மற்றும் பணி

தொகு

முதன்மை சாற்றுக்குழாய் திசு மற்றும் உணவுக்கடத்தி திசுவிற்கு இடையில் அமைந்துள்ள சோற்றுத்திசுவானது உள்நோக்கிய சோற்றுத்திசு என்று அழைக்கபபடுகிறது. இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது, ஆரைக்கதிர் கோட்டு செல்களானது, ஒரு கோடாக அருகேயுள்ள சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசுக்களுக்கு இடையே அமைந்துள்ளது. பின்பு இது ஆக்குத்திசுவாகி புது இடைப்பட்ட சோற்றுத்திசுவாகின்றது. உள்நோக்கிய மற்றும் இடைப்பட்ட சோறு்றுத்திசு இணைந்து வளையம் போன்ற வடிவம் பெறுகிறது.இவ்வளையமானது, முதன்மை சாற்றுக்குழாய் திசு மற்றும் உணவுக்கடத்தி திசுவினைப் பிாிக்கின்றது. சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசுவானது, இரண்டாம் நிலை சாற்றுக்குழாய் திசுவினை வளையத்தின் உட்புறத்திலும் மற்றும் வெளிப்புறத்தில் இரண்டாம் நிலை உணவுக்கடத்தி திசுவினை, முதன்மை சாற்றுக்குழாய் திசு மற்றும் உணவுக்கடத்தி திசுவினைத் தள்ளிக் கொண்டு உருவாக்குகின்றது,

சாற்றுக்குழலிடைச் சோறு்றுத்திசு பொதுவாக இரண்டு வகையான செல்களைக் கொண்டுள்ளது,

கதிர்வடிவ தோற்றுவிப்பிகள்

ஆரை தோற்றுவிப்பிகள்

சோற்றுத்திசுவிலுள்ள ஆக்குத்திசுவை பராமரித்தல்

தொகு

சாற்றுக்குழலிடைச் சோறு்றுத்திசுவானது வலைப்பின்னலால் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சமிக்கைகளைப் பெற்று திரும்ப பெறக்கூடிய கண்ணிகளால் பராமாிக்கப்படுகிறது. தற்போது, ஊக்கிகள் மற்றும் சிறு பெப்டைடுகள் ஆகிய இரண்டும் தகவலைக் கடத்தக் கூடியவையாக இருக்கின்றன. இதே போன்ற ஒழுங்கமைப்பானது மற்ற தாவரங்களின் ஆக்குத்திசுவிலும் நடைபெறுகின்றன. சோற்றுத்திசுவிலுள்ள ஆக்குத்திசுவானது சாற்றுக்குழாய் திசு மற்றும் உணவுக்கடத்தி திசு ஆகிய இரண்டிலுமிருந்தும் சமிக்கைகளைப் பெறுகின்றன. ஆக்குத்திசுவிற்கு வெளியில் இருந்து பெறப்பட்ட சமிக்கைகள் உள் காரணிகளைக் கட்டுப்படுத்துகின்றன, இது செல் பெருக்கம் மற்றும் செல் வேறுபாட்டை ஊக்குவிக்கின்றன.[5]

ஊக்கிகளை கட்டுப்படுத்துதல்

தொகு

ஆக்ஸின்கள், எத்திலீன், சிபெரெல்லின்ஸ், சைட்டோகைனின்கள், அப்சிசிக் அமிலம் ஆகியவை சாற்றுக்குழலிடைச் சோறு்றுத்திசுவின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகின்ற தாவர ஊக்கிகளாகும். இந்த தாவர ஊக்கிகள் ஒவ்வொன்றும் வளர்திசுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானவை. இந்த ஊக்கிகளின் வெவ்வேறு செறிவுகளின் சேர்க்கை தாவரங்களின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Esau, Katherine (1958). Plant Anatomy. Chapman and Hall.
  2. 2.0 2.1 Stern, K.R. (1997). Introductory Plant Biology (7 ed.). McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780697257758.
  3. Ewers, F.W. (1982). "Secondary growth in needle leaves of Pinus longaeva (bristlecone pine) and other conifers: Quantitative data". American Journal of Botany 69: 1552–1559. doi:10.2307/2442909. 
  4. Capon, Brian (2005). Botany for Gardeners (2nd ed.). Portland, OR: Timber Publishing. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88192-655-8.
  5. Etchells, J. Peter; Mishra, Laxmi S.; Kumar, Manoj; Campbell, Liam; Turner, Simon R. (April 2015). "Wood Formation in Trees Is Increased by Manipulating PXY-Regulated Cell Division". Current Biology 25 (8): 1050–1055. doi:10.1016/j.cub.2015.02.023. பப்மெட்:25866390.