சாலிகிராமம் ராமகவுடா மகேசு

இந்திய அரசியல்வாதி

சாலிகிராமம் ராமகவுடா மகேசு (Saligrama Ramegowda Mahesh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சுருக்கமாக எசு. ஆர். மகேசு என்றும் சா. ரா. மகேசு என்றும் அறியப்படுகிறார். கர்நாடக அரசியலில் சமயசார்பற்ற சனதா தளம் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். அனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தம்பதியருக்கு ஒரு மகன் , ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சாலிகிராமம் ராமகவுடா மகேசு
கர்நாடக பட்டு வளர்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்
பதவியில்
6 சூன் 2018 – 8 சூலை 2019
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2008 (2008)
முன்னையவர்மஞ்சனகள்ளி மகாதேவு
தொகுதிகிருசுணராசநகரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 அக்டோபர் 1966 (1966-10-08) (அகவை 57)
சாலிகிராமம்
அரசியல் கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
துணைவர்அனிதா மகேசு
பிள்ளைகள்தனுசு மற்றும் செயந்து
வாழிடம்(s)சிறீகாந்தா நிலையம், ராமநாதம்புரா சாலை, சாலிகிராமம், கிருசுணராசா நகர் தாலுகா, மைசூர் -571604
கல்விபட்டதாரி
As of சூ) லை, 2021
மூலம்: [1]

2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதி வரை கர்நாடக சுற்றுலா மற்றும் பட்டு வளர்ப்பு அமைச்சராகப் பணியாற்றினார். மேலும் இவர் தற்போது 2008 முதல் கிருசுணராசநகர சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "S R Mahesh(JD(S)):Constituency- KRISHNARAJANAGARA(MYSORE) - Affidavit Information of Candidate".
  2. "S. R. Mahesh Scores Hat-Trick In K.R. Nagar". 16 May 2018.
  3. "Karnataka cabinet formation: List of 25 ministers sworn-in". India Today.
  4. "MLAs GT Devegowda, Sa Ra Mahesh among 25 inducted as ministers in Kumaraswamy cabinet".[தொடர்பிழந்த இணைப்பு]