நெல்லின் ஊர்

(சாலியூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெல்லின் ஊர் சங்ககாலத்துத் துறைமுகங்களில் ஒன்று. இது பெரிப்ளஸ் குறிப்பு நூல் பத்தி 54-ல் 'நெல்சிந்தா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழகதின் மேற்குக் கடலோரத் துறைமுகங்களில் ஒன்று.

பாண்டியன் வெற்றி
இதனைச் சங்ககாலத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்று தன் நாட்டுடன் சேர்த்துகொண்டான்.
நாவாயிலிருந்து இறக்குமதி இந்த ஊரின் துறைமுகத்தில் பொன்னும், விழுமிய பண்டங்களும் நாவாய் என்னும் கப்பல்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.[1]
  • ஊணூர் என்னும் சொல் உணவு மிக்க ஊர் என்னும் பொருள் தரும். தாலமி குறிப்பிடும் சாலியூர் இது ஆகலாம்.[2]

அயலக மாலுமிகள்

தொகு
தாலமி
தாலமி சாலியூர் எனக் குறிப்பிடுவதும் இந்த ஊரே. தமிழில் நெல்லைச் சாலி எனவும் வழங்குவர்.

அடிக்குறிப்பு

தொகு
  1. நெடுங்கொடிமிசை இதை எடுத்து, இன்னிசைய முரசம் முழங்க,
    பொன் மலிந்த விழுப்பண்டம்,
    நாடு ஆர நன்கு இழிதரும்,
    ஆடு இயல் பெருநாவாய்,
    மழை முற்றிய மலை புரையத்
    துறை முற்றிய துளங்கு இருக்கை,
    தெண்கடல் குண்டகழிச்,
    சீர்சான்ற உயர் நெல்லின்
    ஊர் கொண்ட உயர் கொற்றவ (மதுரைக்காஞ்சி 79-89)
  2. சாலி = நெல் = உணவு = ஊண்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லின்_ஊர்&oldid=1466422" இலிருந்து மீள்விக்கப்பட்டது