சாலியோடைட்டு

பைலோசிலிக்கேட்டு கனிமம்

சாலியோடைட்டு (Saliotite) என்பது (Li,Na)Al3(AlSi3O10)(OH)5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1] சிமெக்டைட்டு குழுவிலுள்ள பைல்லோ சிலிக்கேட்டுகள் வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. குக்கீட்டு மற்றும் பாராகோனைட்டு ஆகிய கனிமங்களின் வரிசைப்படுத்தப்பட்ட 1:1 விகிதத்தில் படுகைக்களுக்கு இடையில் மாறி மாறி அமைந்துள்ளது. சரியான பிளவுடன் முத்து போன்ற பளபளப்பும் வெள்ளை நிற கோடுகளையும் கொண்டுள்ளது. இதன் படிக அமைப்பு ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பு ஆகும். சாலியோடைட்டின் கடிமத்தன்மை அளவு மோவின் அளவில் 2-3 என மதிப்பிடப்பட்டுள்ளது.[1][2]

சாலியோடைட்டுSaliotite
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Li,Na)Al3(AlSi3O10)(OH)5
இனங்காணல்
நிறம்நிறமற்றது முதல் வெள்ளை வரை
படிக அமைப்புஒற்றைசரிவச்சு
பிளப்புசரியான பிளவு {001} இல்
மோவின் அளவுகோல் வலிமை2 - 3
மிளிர்வுமுத்து போன்ற
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.75
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.580 - 1.590 nβ = 1.580 - 1.590 nγ = 1.590 - 1.600
இரட்டை ஒளிவிலகல்δ = 0.010
2V கோணம்30° to 50°
மேற்கோள்கள்[1][2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாலியோடைட்டு கனிமத்தை Sal[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

1994 ஆம் ஆண்டில், எசுப்பானியாவிலுள்ள தன்னாட்சிப் பகுதியான அந்தாலூசியாவின் அல்மேரியா நகரத்தின் வடக்கே உள்ள ஒர் உயர்தர உறுமாறிய பாறைகளின் வெளிப்புறத்தில் சாலியோடைட்டு முதன்முதலில் கண்டுபடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. பிரெஞ்சு புவியியலாளர் பியர் சாலியட்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Saliotite data on Mindat
  2. 2.0 2.1 Saliotite data on Webmineral
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலியோடைட்டு&oldid=4110147" இலிருந்து மீள்விக்கப்பட்டது