சாலமோன்
சாலமோன் (ஆங்கில மொழி: Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה (Shlomo), அரபு மொழி: سليمان (Sulaymān), கிரேக்க மொழி: Σολομών (Solomōn)) என்பவர் ஒன்றிணைந்த யூதா-இஸ்ரயேல் நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவரும் தாவீது அரசனின் மகனும் ஆவார்.
சாலமோன் அரசர் | |
---|---|
இஸ்ரயேலின் அரசர் | |
முன்னிருந்தவர் | தாவீது |
பின்வந்தவர் | ரெகபெயாம் |
வாரிசு(கள்) | ரெகபெயாம் |
மரபு | தாவீதின் வழி |
தந்தை | தாவீது |
தாய் | பத்சேபா |
பிறப்பு | எருசலேம் |
இறப்பு | எருசலேம் |
விவிலியக் குறிப்புகள்
தொகு1 அரசர்கள், 1 குறிப்பேடு,[1] என்னும் விவிலிய நூல்கள் சாலமோனை ஒன்றிணைந்த யூதா-இசுரயேல் நாட்டின் அரசராக அடையாளம் காட்டுகின்றன. யூத சமய நூலாகிய தால்முத் சாலமோனை 48 இறைவாக்கினருள் ஒருவராகக் கருதுகிறது.[2] சாலமோன், தாவீது அரசருக்கும் பத்சபா என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.[3] சாலமோனின் தந்தை தாவீது வட பகுதியாகிய இசுரயேலையும் தென் பகுதியாகிய யூதாவையும் வலுவான அரசாக மாற்றினார். அவருக்கு முன் சவுல் இசுரயேலின் முதல் அரசராக இருந்தார். இவ்வாறு, சாலமோன் ஒன்றிணைந்த அரசின் மூன்றாவது, மற்றும் கடைசி அரசர் ஆனார்.
சாலமோனின் ஆட்சிக்குப் பின் வட நாடு இசுரயேல் என்றும், தென்னாடு யூதா என்றும் தனித்தனியாகப் பிரிந்தன.
குர்ஆன் சாலமோனை முதன்மையான இறைவாக்கினராக சுலைமான் நபி கருதுகின்றது. சாலமோனுடைய ஆட்சிக்காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரையென கணிக்கப்படுகின்றது.
சாலமோனின் சிறப்பு
தொகுசாலமோன் தன் நாட்டின் தலைநகராகிய எருசலேமில் கடவுளுக்கு புகழ்மிக்க கோவிலைக் கட்டினார். இது "முதல் கோவில்" (First Temple) என்று அழைக்கப்படுகிறது.[3]. மேலும், விவிலியம் சாலமோனைத் தலைசிறந்த ஞானி என்று சித்தரிக்கிறது. சாலமோனின் அறிவுத்திறனையும் புகழையும் கேள்விப்பட்டு, சேபா நாட்டு அரசி அவரைச் சந்தித்து விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார் (1 அரசர்கள் 10:1-13).
சாலலொமோனின் ஆட்சியின்போது புகழ்மிக்க பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன.
சாலமோன் ஆட்சிக்காலத்தில் நாட்டில் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. ஆயினும் விவிலியத்தின்படி, சாலமோன் யாவே என்னும் உண்மைக் கடவுளின் வழிபாட்டை மறந்து, தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார்; சிலைவழிபாட்டை ஆதரித்தார். இதனால் கடவுள் அவரைத் தண்டித்தார்.[4]
சாலமோனின் வாரிசு
தொகுசாலமோனின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தார் என்று விவிலியம் கூறுகிறது (1 அரசர்கள் 11:43). சாலமோன் வழிமரபில் வந்த யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார்.
உசாத்துணை
தொகு- ↑ http://www.jstor.org/pss/1517303
- ↑ Rashi to Megillah 14a
- ↑ 3.0 3.1 Barton, George A. "Temple of Solomon". Jewish Encyclopedia. New York, NY.: Funk & Wagnalls. 98–101. DOI:10.1038/2151043a0. அணுகப்பட்டது 2007-05-15.
- ↑ Peter J. Leithart, A House for My Name, 157, Canon Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-885767-69-1