சால் ஆறு (இந்தியா)
சால் ஆறு (Sal River) என்பது இந்தியாவின் கோவாவின் சால்செட்டேயில் உள்ள ஒரு சிறிய நதியாகும். இந்த ஆறு வெர்னா அருகே துவங்கி, நூவம், மோன்கல், செராலிம், கோல்வா, மார்கோவா, பெனாலிம், நாவாலிம், வர்கா, ஓர்லிம், கர்மோனா, டிராமாபூர், சின்சினிம், அசோல்னா,கேவோலோசிம், மோபோர் கிராமங்கள் வழியே பாய்ந்து அரபிக்கடலில் பெடுல் என்ற இடத்தில் கலக்கின்றது .
2008 முதல் பெனாலிம்வாசிகள் இந்த ஆறு மாசுபடுவதாக அரசாங்கத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.[1] மேலும் கார்மோனாவில் வசிப்பவர்கள் இப்பகுதியில் அமையவிருந்த "மாபெரும் வீட்டுவசதி திட்டத்தை" தடுத்து நிறுத்த கிரீன்பீஸ் அமைப்பிடம் மனுவை அளித்தனர்.[2] இதன் பின்னர் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அரசு இந்த ஆற்றில் மாசுபாட்டினைக் கட்டுப்படுத்த 61.74 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.[3]
குறிப்புகள்
தொகு- ↑ "'Save Sal plea to Cong govt fell on deaf ears'". The Times of India. Apr 1, 2012 இம் மூலத்தில் இருந்து 2012-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120517214539/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-01/goa/31269936_1_cong-govt-state-pollution-control-board-khareband. பார்த்த நாள்: 21 September 2013.
- ↑ "Stop Destruction of River Sal in Goa! - Samson D' Costa". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
- ↑ http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=176150