சாழல்
சாழல் என்பது இரு பெண்கள் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு ஆகும். இதில் ஒரு பெண் இறைவனின் செயல்களை ஏளனப்படுத்திப் பேசுவாள். மற்றொரு பெண் இறைவனின் செயல்களை உயர்த்திப் பேசுவாள்.
- மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகத்தில் 20 திருச்சாழல் பாட்டு இடம்பெறுகிறது.
- இக்காலத்திலும் நாட்டார் வழக்கில் ஒரு பெண் சொலவடையால் விடுகதையைச் சொல்லியும், அதற்கு மற்றொரு பெண் சொலவடையாலேயே விடை கூறும் விளையாட்டு காணப்படுகிறது.
தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பாலுகந்தான் பெரும் பித்தன் காணேடீ;
பெண்பால் உகந்திலனேல் பேதாய்! இருநிலத்தோர்
விண்பா லியோ கெய்தி வீடுவர் காண் சாழலோ![1]
- ‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
- கடல் வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
- கலக்கியகை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை
- மலர்க்கமல உந்தியாய்! மாயமோ! மருட்கைத்தே [2]