சா. தேவதாஸ்

தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும்

சா. தேவதாஸ் தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், விமர்சகரும் ஆவார். பபானி பட்டாச்சார்யாவின் "லடாக்கிலிருந்து கவிழும் நிழல்" என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக 2014ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1][2]

விருதுநகர் மாவட்டம் நடையனேரியைச் சேர்ந்த சா. தேவதாஸ் இராசபாளையத்தில் வசித்து வருகிறார். 1975 - 77 காலகட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்ற இவர் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இதுவரை இருபத்தைந்து நூல்களை மொழிபெயர்த்திருப்பதோடு ஆறு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.[1][2][3]

கட்டுரை நூல்கள்

தொகு
  • சா.தேவதாஸ் கட்டுரைகள் (1993)
  • மறுபரிசீலனை (2001)
  • 'மூன்றாவது விழியின் முதலாவது பார்வை (2002)
  • சூரிய நடனம்: விளிம்பு நிலைப் பிரதிகள் (2007)
  • அமர்தியா சென் (2008)
  • சார்லஸ் டார்வின், பரிணாமத்தின் பரிமாணங்கள் (2010)
  • புதிர்களை விடுவித்தல் (2010)
  • இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் (2010)
  • எனது எழுத்து எனது சாட்சியம் (2017)
  • ஆல்பெர் காம்யு: நூற்றாண்டு நாயகன் (2014)
  • மரணதண்டனையின் இறுதித் தருணங்கள் (2016)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • புன்னகை புரியும் இளவரசி, இந்தியச் சிறுகதைகள் (1995)
  • பகத்சிங் சிறைக்குறிப்புகள் (1995)
  • கதாசாரகம், சர்வதேச வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு (1999)
  • குளிர்கால இரவில் ஒரு பயணி, இடலோ கல்வினோ (2001)
  • புலப்படாத நகரங்கள், ஈடலோ கல்வினோ (2003)
  • சேகுவேராவின் கொரில்லா யுத்தம் (2003)
  • பீட்டர்ஸ்பர்க் நாயகன், ஜே. எம். கூட்ஸி (2004)
  • பிளாடெரோவும் நானும் ஜுவான் ரமோன் ஜிமெஜெஸ் (2005)
  • காஃப்காவின் கடிதங்கள், கதைகள், கட்டுரைகள் (2006)
  • டாலியின் டைரி (2006)
  • விஜயநகரச் பேரசசு( Forgotten Empire of Vijay Nagar)(2006)
  • ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை, இடலோ கல்வினோ (2006)
  • யூதப் பறவை (2007)
  • செவ்விந்தியரின் நீண்ட பயணம், பெர்னார்ட் மலமூட் (2008)
  • லியோனார்டோ டாவின்ஸி குறிப்புகள் (2008)
  • சார்லஸ் டார்வின் : பரிணாமத்தின் பரிமாணங்கள் (2009)
  • அமெரிக்கன், ஹென்றி ஜேம்ஸ் (2009)
  • இறுதி சுவாசம், லூயி புனுவல் (2009)
  • மைமோசா, ஜாங்ஜி யான்லியாங் (2010)
  • குற்றப்பரம்பரை அரசியல்' முகில்நிலவன் (2010)
  • லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' பபானி பாட்டாச்சாரியா (2011)
  • பாப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள் (2011)
  • சுதந்திரம் மற்றும் மக்கள் விடுதலை குறித்த பிரச்சனைகள்' கோபாட் காந்தி/ உரையாடல் (2013)
  • அரேபிய இரவுகளும் பகல்களும், நகிப் மஹ்ஃபூஸ் (2014)
  • தமிழ்நாட்டு அரசியல்' பேரா.ராஜய்யன் (2015)
  • சூதாடியும் தெய்வங்களும்' வாய்மொழிக்கவிதைகள் (2015)
  • புனைவும் பிரக்ஞையும்“ பிறமொழிக் கதைகள் மற்றும் பதிவுகள் (2016)
  • ' ரில்கேயின் கடிதங்கள்' ரில்கே (2016)
  • சாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும், மீனா தண்டா (2016)
  • ' இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்' சல்மான் ருஷ்டி (2016)
  • ' வரலாற்றின் அலையோசை முழங்கும் இந்துமாக்கடல்' சஞ்சீவ் சன்யால் (2017)
  • நிழல்வெளி, தமிழச்சி தங்கபாண்டியன் (2017)
  • தாஸ்தோயெவ்ஸ்கி ஓர் எழுத்தாளனின் நாட்குறிப்பு(ஏப்ரல் 2019)
  • எதிர் கடவுளின் சொந்த தேசம் - எ.வி.சக்திதரன் (2020)
  • வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும் (2021)
  • மதுரை வரலாறு பேரா.கே. ராஜய்யன் (2021)
  • செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் ஜேக் வெதர்ஃபோர்ட் (2022)
  • நகைக்கத்தக்கதல்ல - அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள் - உண்ணாமதி சியாம சுந்தர் (2022)
  • ரோசா லக்ஸம்பர்க்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும், ஜான் நிக்ஸன்
  • ' சத்யஜித் ரே-ஷியாம் பெனகல் உரையாடல்'

தொகுப்பு

தொகு
  • எமிலிக்காக ஒரு ரோஜா - உலகின் தலை சிறந்த காதல் கதைகள் (2012)

விருதுகள்

தொகு
  • திசை எட்டும் விருது பிளாடெரோவும் நானும் நூலுக்காக (2005)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மொழிபெயர்ப்பு விருது அமெரிக்கன் நாவலுக்காக (2005)
  • 'சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது லடாக்கிலிருந்து கவிழும் நிழல் (2011)
  • ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது (2015)
  • சென்னை புத்தகக் கண்காட்சி விருது (2016)


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "எழுத்தாளர் சா. தேவதாஸூக்கு சாகித்ய அகாதெமி விருது". தினமணி. மார்ச் 10, 2015. http://www.dinamani.com/india/2015/03/10/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE.-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/article2707407.ece. பார்த்த நாள்: சனவரி 24, 2016. 
  2. 2.0 2.1 "எழுத்துப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்: சாகித்ய அகாடமி விருது பெற்ற சா. தேவதாஸ் நெகிழ்ச்சி". தி இந்து (தமிழ்). மார்ச் 12, 2015. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article6985530.ece. பார்த்த நாள்: சனவரி 24, 2016. 
  3. "எழுத்தாளர்களுக்கு எதிர்பார்ப்பு கூடாது: சாகித்ய அகாடமி விருது பெறும் தேவதாஸ் கருத்து". தினமலர். மார்ச் 11, 2015. http://www.dinamalar.com/news_detail.asp?id=1203837. பார்த்த நாள்: சனவரி 24, 2016. 

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._தேவதாஸ்&oldid=3416383" இலிருந்து மீள்விக்கப்பட்டது