சா இலத்தீப் பல்கலைத் தாவரவியல் பூங்கா, உலர்தாவரகம்
சா இலத்தீப் பல்கலைத் தாவரவியல் பூங்கா, உலர்தாவரகம் (Shah Latif University Botanical Garden & Herbarium (SLUBGH)[1]) என்ற அமைப்பு பாக்கித்தான் நாட்டில் காய்பூர் (Khairpur) நகரில் உள்ளது.[2] இது சா அப்துல் இலத்தீப் பல்கலைக் கழகத் (Shah Abdul Latif University) திட்டத்தால் உருவானது. இப்பல்கலையின் பெயரானது, சூபி அறிஞர் சா அப்துல் இலத்தீப் பிட்டாய் (Shah Abdul Latif Bhittai) என்பவரை போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழக உலர் தாவரகத்தில் 5000 உலர் தாவர ஆவணங்கள் பாதுக்காக்கப்படுகின்றன. இணைய வழி ஆவண பரிமாற்றங்களையும், பல்கலை மாணவர்களுக்கு, பாக்கித்தானில் பல மாவடங்களின் தாவரவளச் சூழல் குறித்து அறிய, கல்விச் சுற்றுலாக்களையும் அளிக்கிறது.
தோற்றம்
தொகுஇசுலாமாபாத் உயர் கல்வி ஆணையத்தால் நிதியால், இது கட்டமைக்கப்பட்டது. பல்லுயிர் வளம், அதன் பாதுகாப்பு மையமாக (CBC), சிந்து ஆளுநர்/வேந்தர் பல்கலைக்கழகங்களின் ஒப்புதலின்படி, 2009 ஆம் ஆண்டு திசம்பர் 24 நாளில் உருவானது. இவ்வமைப்பு மாதிரிகளின் சேகரிப்பில், பல்வேறு பூக்கும் தாவரங்கள், ஜிம்னோஸ்பெர்ம்கள், ஃபெர்ன்கள் போன்றவை அடங்கியுள்ளன. பாக்கித்தானின் இந்த உலர் தாவரகம், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனமாகும். மேலும் ஆவணப்படுத்தல் வசதிகளுடனும், தாவரத் தரவு களஞ்சியமாகவும் திகழ்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Shah Latif University Botanical Garden & Herbarium (SLUBGH)
- ↑ இருப்பிடம். "Location and address of the Shah Abdul Latif University". Campus location. Archived from the original on 20 September 2013. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச்சு 2024.