சிஎம் பங்க்
பிலிப் ஜேக் புரூக்ஸ் (Phillip Jack Brooks) [1] (பிறப்பு: அக்டோபர் 26, 1978) சிஎம் பங்க் எனும் மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் இவர் முன்னாள் அமெரிக்க மற்போர் வீரர், வரைகலை எழுத்தாளர் ஆவார். அதிக நாட்கள் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினை தன் வசம் வைத்திருந்தவர்கள் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.
தனது பதினைந்து ஆண்டு கால மற்போர் வாழ்க்கையில் உலக மற்போர் வாகையாளராக இரு முறையும் உலக மிகுஎடை வாகையாளர் பட்டத்தினை மூன்று முறையும் ஈ சி டபிள்யூ மற்றும் ஆர் ஓ எச் வாகையாளர் பட்டத்தினை தலா ஒரு முறையும் வென்றுள்ளார். மேலும் கோஃபி கிங்ஸ்டனுடன் இணைந்து கூட்டு வாகையாளர் பட்டத்தினையும் ஒரு முறை கண்டங்களுக்கிடையேயான வாகையாளர் பட்டத்தினயும் பெறுள்ளார். 2011 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சிலாமி விருதுகளில் உலக மற்போர் மகிழ்கலை நட்சத்திர வீரராகத் தேர்வானார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஏற்பட்ட சில அதிருப்தி காரணமாக 2014 ஆம் ஆண்டில் தொழில் முறை மற்போர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இறுதி மோதல் வாகையாளர் போட்டியில் (அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்சிப்) விளையாட ஒப்பந்தமானார். செப்டம்பர் 10, 2016 இல் நடைபெற்ற முதல் தொழில்முறை போட்டியில் மிக்கி காலினை எதிர்த்து மோதினார். ஆனால் அந்தப் போட்டியில் பங்க் தோல்வியடைந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபுரூக்ஸ் அக்டோபர் 26, 1978 இல் சிக்காகோ, இல்லினாயிசில் பிறந்து லாக்போர்ட்டில் வளர்ந்தார்.[2] இவரின் தந்தை ஒரு பொறியாளர், தாய் இல்லத்தரசி ஆவார். இவர்களின் பெற்றோருக்கு பங்க் ஐந்தாவது குழந்தை ஆவார்.[3]
புரூக்கின் தந்தை குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதுவே அவரினை குடிப்பழக்கம் அற்றவராக இருக்க உந்துசக்தியா அமைந்தது. மேலும் இவரின் தாய் இருமுனை பிறழ்வினால் பாதிக்கப்பட்டிருந்தார்.[4]
உலக மிகுகன வாகையாளர்
தொகுமார்ச் 30 இல் நடைபெற்ற ரெசில்மேனியா 24 ஆவது ஆண்டில் நடைபெற்ற ஏணிப் போட்டியில் (லேடர் மேட்ச்) கர்லிடோ, கிறிஸ் ஜெரிகோ, ஆன் மாரிசன், மாண்டல் வாண்டவியஸ் போர்டர், கென்னடி மற்றும் செல்டன் பெஞ்சமின் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் இவர் வெற்றி பெற்று அந்த ஆண்டின் மணி இன் தெ பேங்க் என்பதனைப் பெற்றார்.[5] அதனைப் பெற்றவர், தான் விரும்பும் போது உலக மிகு கனவாகையாளருடன் அந்தப் பட்டத்தினைப் பெற போட்டியிடலாம் என்பது விதி. மே 15 இல் நடைபெற்ற ஜட்மெண்ட் டே நிகழ்ச்சியில் கெயினுடன் இணைந்து ஜான் மோரிசன் மற்றும் தெ மிசு இணையினை வீழ்த்தி கூட்டு வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார்.[6]
சூன் 23 இல் நடைபெற்ற உலக மற்போர் மகிழ்கலை நிறுவன வரைவில் பங்க் ரா பிரிவில் இடம்பெற்றார்.[7] படிஸ்டா உலக மிகுகன வாகையாளரான எட்ஜினை வீழ்த்திய போது இவர் தனது மணி இன் தெ பேங்கினை வைத்து அந்தப் போட்டியில் விளையாடி வாகையாளர் பட்டம் பெற்றார். பின்பு அன்றைய இரவே ஜான் பிராட்ஷா லேஃபீல்டுவிற்கு எதிரான உலக மிகுகன வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.[8] அதன்பிறகு நடைபெற்ற பல போட்டிகளில் அவர் வெற்றி பெற்று அன்பர்கிவன் எனும் நிகழ்ச்சி வரை 69 நாட்கள் அவர் வாகையாளராகத் திகழ்ந்தார்.[9][10][11][12] லெகசி மற்றும் ரேண்டி ஆர்டன் தாக்கியதனால் கிறிஸ் ஜெரிகோவிற்கு எதிரான போட்டியில் இவரால் விளையாடாமல் போனதால் இவர் வாகையாளர் பட்டத்தினை இழந்தார்.[13] செப்டம்பர் 15 இல் ராவில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் ஜெரிஜோவிற்கு எதிராக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால் அந்தப் போட்டியிலும் இவர் தோல்வியடைந்தார்.[14]
சான்றுகள்
தொகு- ↑ Lindner, Matt (May 10, 2012). "CM Punk lives dream, sings at Cubs game". ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் May 25, 2017.
- ↑ Pratt, Gregory (June 15, 2013). "WWE star CM Punk has Tinley Park ties". Chicago Tribune. Archived from the original on நவம்பர் 7, 2017. பார்க்கப்பட்ட நாள் May 28, 2017.
- ↑ Arroyave, Luis (April 5, 2009). "Local guy makes it big on World Wrestling Entertainment". Chicago Tribune. பார்க்கப்பட்ட நாள் August 12, 2015.
- ↑ TMZ, TMZ (June 26, 2013). "WWE Star CM Punk Hits Mom with Restraining Order 'Threats to Commit Suicide'". TMZ. பார்க்கப்பட்ட நாள் June 26, 2019.
- ↑ Clayton, Corey (March 30, 2008). "Perseverance makes Punk 'Mr. Money' inOrlando". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on April 5, 2008. பார்க்கப்பட்ட நாள் March 12, 2012.
- ↑ Kapur, Bob (2008-05-18). "Judgment Day spoils streak of good shows". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் 2008-08-27.
- ↑ Sitterson, Aubrey (June 23, 2008). "A Draft Disaster". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் June 25, 2008.
- ↑ Adkins, Greg (June 30, 2008). "Opportunity Knocked, Punk Answered". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் September 8, 2008.
- ↑ Tello, Craig (September 7, 2008). "Punk possibly unable to compete?". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் September 8, 2008.
- ↑ Tello, Craig (July 20, 2008). "Big Red invasion". World Wrestling Entertainment. Archived from the original on July 23, 2008. பார்க்கப்பட்ட நாள் July 21, 2008.
- ↑ Caldwell, James (July 21, 2008). "Caldwell's WWE Raw Report 7/21: Ongoing "virtual time" coverage of live USA Network broadcast". Pro Wrestling Torch. TDH Communications Inc. பார்க்கப்பட்ட நாள் April 14, 2018.
- ↑ Plummer, Dale; Tylwalk, Nick (August 17, 2008). "SummerSlam comes close to'blockbuster'status". Slam! Sports. Canadian Online Explorer.
- ↑ "Chris Jericho wins World Heavyweight Championship Scramble". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் December 23, 2012.
- ↑ Sitterson, Aubrey (September 15, 2008). "Snakes and ladders". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் September 26, 2008.