சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான அமெரிக்க-இந்தியா முன்முயற்சி
சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான அமெரிக்க-இந்தியா முன்முயற்சி (United States-India Initiative on Critical and Emerging Technology) என்பது வளரும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் இந்தியாவால் நிறுவப்பட்ட ஒரு கூட்டு கட்டமைப்பாகும். செயற்கை நுண்ணறிவு, துளிமம் கணிப்பு, குறைக்கடத்திகள் மற்றும் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஆகியவை இப்பகுதிகளில் உள்ளடங்கும்.[1]
பின்னணி
தொகுமே 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்க சனாதிபதி ஜோ பைடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான அமெரிக்க-இந்தியா முன்முயற்சியை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து, ஜனவரி 31, 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் தேதியன்று வாசிங்டன், டி.சி.யில் இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் தலைமையில் இவ்வமைப்பின் தொடக்க கூட்டம் நடந்தது.[2][3]
மேலும், துளிமம் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்க இரு நாடுகளும் இணைந்து இந்தோ-அமெரிக்க துளிம ஒருங்கிணைப்பு பொறிமுறையை உருவாக்கின. இந்த பொறிமுறையானது தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசாங்கம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் கூட்டு முயற்சிகள் மற்றும் கூட்டாண்மைகளை எளிதாக்குவதற்காக ஒன்றாக வேலை செய்கிறார்கள்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ S, Sumeda (2023-06-17). "Explained | What is the India, U.S. initiative on future tech?" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sci-tech/technology/explained-what-is-the-india-us-initiative-on-future-tech/article66980841.ece.
- ↑ House, The White (2023-01-31). "FACT SHEET: United States and India Elevate Strategic Partnership with the initiative on Critical and Emerging Technology (iCET)". The White House (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ Swanson, Ana (2023-01-31). "U.S. Courts India as Technology Partner to Counter China" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2023/01/31/business/economy/us-india-technology-partnership.html.
- ↑ Pillai Rajagopalan, Rajeswari (4 February 2023). "iCET: Strengthening the India-US Tech Agenda". thediplomat.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.