சிக்கவீர ராஜேந்திரன் (புதினம்)
சிக்கவீர ராஜேந்திரன் என்னும் நூல் ஹேமா ஆனந்ததீர்த்தன் என்பவரால் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்றுப் புதினமாகும். இதன் மூல நூலான சிக்கவீர ராஜேந்திரா என்ற புதினம் அதை எழுதிய மாஸ்தி வெங்கடேச ஐயங்காருக்கு ஞானபீட விருதை பெற்றுத் தந்தது.[1]
சிக்கவீர ராஜேந்திரன் (புதினம்) | |
---|---|
ஆசிரியர்(கள்): | மூலம் (கன்னடம்): மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்
தமிழ்: ஹேமா ஆனந்ததீர்த்தன் |
வகை: | புதினம் |
துறை: | வரலாறு |
இடம்: | புதுதில்லி 16 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 508 |
பதிப்பகர்: | நேஷனல் புக் டிரஸ்ட் |
பதிப்பு: | முதற் பதிப்பு 1974 |
நூலைப்பற்றி
தொகுசிக்கவீர ராஜேந்திரன் என்பது தற்போதைய கர்நாடகத்தின் குடகு பகுதியை ஆண்ட மன்னனின் பெயராகும். இவனது ஆட்சிக் காலத்தில்தான் குடகு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு வந்தது. வீர ராஜேந்திரன் கெட்ட சகவாசத்தில் சிக்கி மன்னனுக்கான நேர்மையை விட்டு விலகியதாலும், அரச குடும்பத்திற்குள் ஏற்பட்ட பூசல்களாலும் அவன் ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது. அவனது ஆட்சியின் இறுதி ஆண்டில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு இப்புதினம் புனையப்பட்டுள்ளது.
உசாத்துணை
தொகு- சிக்கவீர ராஜேந்திரன், இரண்டாம் பதிப்பு 1990, வெளியீடு, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, புதுதில்லி
- சிக்கவீர ராஜேந்திரன், கூகுள் புக்ஸ்