சிக்மோ (Shigmo) அல்லது சிசிரோத்சவம் (Shishirotsava) [1] என்பது இந்திய மாநிலமான கோவாவில் கொண்டாடப்படும் ஒரு வசந்த விழாவாகும். இந்து சமூகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இது கொங்கணி புலம்பெயர்ந்தோரால் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்திய திருவிழாவான ஹோலியின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

சிக்மோவில் ஆரத் வைத்திருக்கும் சிறுவன்

சொற்பிறப்பியல் தொகு

சிக்மோ என்ற கொங்கணி சொல் பிராகிருத சொல்லான சுகிமாகோவிலிருந்தும் சமசுகிருத சொல்லான சுக்ரிஷ்மகா என்ற வார்த்தையிலிருந்து வந்தது. [2]

சிக்மோ இப்போது தொகு

சமீபத்திய ஆண்டுகளில், பாரம்பரிய நாட்டுப்புற மற்றும் தெரு நடனக் கலைஞர்களைக் கொண்ட பொது சிக்மோ நிகழ்ச்சிகளுக்கு மாநில அரசு ஆதரவளித்துள்ளது. மேலும், பிராந்திய புராணங்கள் மற்றும் மதங்களை சித்தரிக்கும் வகையில் விரிவாக கட்டப்பட்டமைக்கபட்டுள்ளது. இதற்கிடையில், கோவாவின் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் சிக்மோ திருவிழாக்கள் தொடர்கின்றன. பதினைந்து நாட்களுக்கு மேலாக, வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றன. இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது இந்து சந்திர நாட்காட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே கிரெகொரியின் நாட்காட்டியின் படி இதன் தேதி மாறுபடும்.

மாறுபாடுகள் தொகு

சிக்மோ திருவிழாவில் தக்தோ சிக்மோ ("சிறிய சிக்மோ") மற்றும் வாட்லோ சிக்மோ ("பெரிய சிக்மோ") என இரண்டு வகைகள் உள்ளன. தக்தோ சிக்மோ பொதுவாக விவசாயிகள், தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களால் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் வாட்லோ சிக்மோ அனைவராலும் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.

நேரம் தொகு

இந்திய சந்திர மாதமான பங்குனி மாத பௌர்ணமி நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தக்தோ சிக்மோ தொடங்கி, [3] கோவாவின் பழைய வெற்றிப் பகுதிகளில் ( (பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி நீண்ட காலத்திற்கு போர்த்துகீசிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்) ) முழு நிலவு நாளில் முடிகிறது. மறுபுறம், வாட்லோ சிக்மோ பெரும்பாலும் புதிய வெற்றிப் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இது பங்குனியின் பௌர்ணமி நாளில் தொடங்கி ஐந்து நாட்கள் தொடர்கிறது.

நாட்டுப்புற பாடல்கள் நடனங்கள், கோயில் திருவிழா தொகு

தக்தோ சிக்மோ முக்கியமாக நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நாட்டுப்புற நடனங்களின் திருவிழாவாக கருதப்படுகிறது. வாட்லோ சிக்மோ கிராமக் கோவிலில் நிகழ்த்தப்படும் ஒரு திருவிழாவாக கருதப்படுகிறது. ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு தேதிகளில் வெவ்வேறு கோவில்களில் இது கொண்டாடப்படுகிறது. முதல் நாளில், கிராம தெய்வம் நீராடப்பட்டு குங்குமப்பூ உடையணிந்து வருகிறது. [4] உணவுப் பிரசாதத்திற்குப் பிறகு, ஒரு விருந்து நடத்தப்படுகிறது. பதர்பியா, கன்சர்பால் மற்றும் தர்கலே கோவில்களில் சிக்மோ கொண்டாடப்பட்டது. இத்திருவிழா, கோவா மற்றும் அண்டை மாநிலங்களில் மிகவும் பிரபலமானது. மேலும், ஏராளமான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Guṅe, Viṭhṭhala Triṃbaka (1979). Gazetteer of the Union Territory Goa, Daman and Diu: district. 1. Goa, Daman and Diu (India). Gazetteer Dept. பக். 263. 
  2. "Apabhraṃśa" (in Konkani). Koṅkaṇī Śabdasāgara. 1. பக். 126. 
  3. Gajrani, S. History, Religion and Culture of India.. பக். 127–128. 
  4. . April 1984. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்மோ&oldid=3130677" இலிருந்து மீள்விக்கப்பட்டது