சிங்கப்பூரில் பௌத்தம்

(சிங்கப்பூரில் புத்த மதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிங்கப்பூரில் பௌத்தம் என்பதானது சிங்கப்பூரில் அதிகமானாரோல் கடைபிடிக்கப்படுகின்ற மதமான பௌத்தமாகும். 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 31.1 விழுக்காட்டு மக்கள் தொகையினர் பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர். [1] 2015இல், 3,276,190 சிங்கப்பூர்க்காரர்களில் 33.21 விழுக்காட்டினரான 1,087,995 பேர் பௌத்தர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். [2]

பௌத்தர்கள் தொகு

சிங்கப்பூரில் பௌத்தம், இசுலாம், கிறித்துவம், இந்து, சீக்கியம், டாவோ, கன்பூசியன் ஆகிய மதங்கள் உள்ளன. [3] 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சம­யம் சாரா­த­வர்­கள் அதி­க­மாகி இருக்­கி­றார்­கள். 15 வயதிற்கும், அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­களில் 31.1% பௌத்­தர்­கள் என்று தங்­களைச் கூறிகொண்­ட­னர். பிற பிரிவுகள் என்ற நிலையில் 8.8% தாவோ­யிஸ்­டு­கள்; 18.9% கிறிஸ்­து­வர்­கள்; 15.6% முஸ்­லிம்­கள்; 5% இந்­துக்­கள் உள்ளனர். [4]

மகாயான பௌத்தம் தொகு

பௌத்த சமயத்தின் ஒரு பிரிவான மகாயானமே சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் பௌத்தமாக உள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தேரவாத பௌத்தத்திற்கு அங்கீகாரம் உண்டு. சீனர்கள் பரவியுள்ள சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பௌத்தம் ஆளுமை பெற்று விளங்குகின்றது. [5] சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் திபெத்திய பௌத்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.[6]

பௌத்த அமைப்பு தொகு

1948இல் நிறுவப்பட்ட சிங்கப்பூர் பௌத்த பெடரேசன் என்ற அமைப்பானது சிங்கப்பூரில் உள்ள பௌத்தர்களையும், பௌத்த அமைப்புகளையும் ஒன்றிணைக்கிறது. [7] மேலும் பௌத்தம் தொடர்பான விழா நிகழ்வுகளை நடத்துகிறது. [8]

மேற்கோள்கள் தொகு

  1. "Census of Population 2020: Religion" (PDF). Department of Statistics Singapore. 16 June 2021. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
  2. "General Household Survey 2015 - Content Page". Archived from the original on 12 February 2018. பார்க்கப்பட்ட நாள் 1 February 2019.
  3. நாடுகள் அறிவோம்: சிங்கப்பூர், தினமணி, 30 சூலை 2011
  4. சிங்கப்பூர் மக்கள்தொகை 5.69 மி. 10 ஆண்டுகளில் மக்கள் பெருக்கம் வரலாறு காணா குறைவு; ஒற்றையர் அதிகம்; குழந்தை பிறப்பு சரிவு, தமிழ் முரசு, 17 சூன் 2021
  5. இரா.குறிஞ்சிவேந்தன், உலக நாடுகளில் பௌத்த சமய நிலை, நியூ இந்தியன் சென்னை நியூஸ், 20 மே 2018
  6. அலெக்சாண்டர் பெர்சின், இன்றைய உலகில் பௌத்தம், Study Buddhism
  7. Singapore Buddhist Federation
  8. Singapore Buddhist Federation Promotes Alternatives to Life Release for Vesak Celebrations, Buddhist Door Global, 1 June 2018

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூரில்_பௌத்தம்&oldid=3508510" இலிருந்து மீள்விக்கப்பட்டது