சிங்கப்பூர் டேக்வாண்டோ கூட்டமைப்பு

சிங்கப்பூர் டேக்வாண்டோ கூட்டமைப்பு 1973 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] சிங்கப்பூர் டேக்வாண்டோ கூட்டமைப்பு உலக டேக்வாண்டோ கூட்டமைப்பின் கீழ் உள்ளது.[2] சிங்கப்பூர் டேக்வாண்டோ சங்கம் சிங்கப்பூரில் டைக்குவாண்டோ கலைக்கு உள்ள முக்கியக் கூட்டமைப்புகளில் ஒன்றாகும். தற்போது இந்தக் கூட்டமைப்பில் சுமார் 30,000 பயிற்சியாளர்கள் உள்ளனர்.

விதிமுறைகள்

தொகு

ஆறு வயதிற்கு மேலே உள்ள சிறுவர்கள் மட்டுமே இக்கூட்டணியின் கீழ் உள்ள தேக்வோண்டோ வகுப்புகளில் சேர முடியும். அனைத்து டேக்வாண்டோ பயிற்சியாளர்களும் சிங்கப்பூர் டேக்வாண்டோ கூட்டமைப்பின் உறுதிமொழியை மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும். டேக்வாண்டோ கலையைத் தேவையில்லாமல் பயிற்சி நேரத்தின் வெளியே தவறாகப் பயன்படுத்தப் பயிற்சியாளர்களுக்கு அனுமதி இல்லை. அவ்வாறு செய்பவர்களிடமிருந்து தங்கள் டேக்வாண்டோ பெல்ட்களும், அவர்கள் தொடர்ந்து தேக்வாண்டோ கற்கும் தகுதியும்  பறிக்கப்படும்.

சீருடை

தொகு

டேக்வாண்டோவில் உள்ள ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறு நிற பெல்ட்டுகள் உள்ளன. "பூம்" பெல்ட் நிலையை அடைந்தவுடன் பயிற்சியாளர்கள் ஒரு புதிய சீருடையை ஒவ்வொரு பயிற்சி நாள் அன்றும் அணிய வேண்டும். கூட்டமைப்பின் கீழ் டேக்வாண்டோ பயிற்சி செய்பவர்கள் தங்கள் சீருடையின் மேல் இடது பையில் சிங்கப்பூர் டேக்வாண்டோ கூட்டமைப்பின் சின்னம் கொண்டிருக்கும் சீருடைகள் மட்டுமே அணிய வேண்டும். சீருடையின் பின்னால் இருக்கும் வார்த்தைகள் தவறாக இருக்கக் கூடாது. கூட்டமைப்பு அங்கீகரிக்காத எந்த மாற்றங்களையும் சீருடையில் செய்யக்கூடாது. அனைத்து பெல்ட் தகுதியாளர்களும் அவர்களது நிலைக்கு உரிய சீருடையையே அணிய வேண்டும்.

டேக்வாண்டோ பரீட்சை

தொகு

டேக்வாண்டோ தேர்வில் தேர்ச்சி பெறுவதற்குப் பயிற்சியாளர்கள் தங்கள் பெல்ட் நிலைக்குத் தேவையான அனைத்து உதைகளையும் ஒரு தொடர்ச்சியையும் நிரூபிக்க வேண்டும். மேலும், தேர்வு நாளில் அதே பெல்ட் நிலையைக் கொண்ட மற்றொரு பயிற்சியாளருடன் சண்டையிட வேண்டும். சிங்கப்பூர் தேக்வாண்டோ கூட்டமைப்பின் உறுதிமொழியையும் கூறவேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "TKD: Now big split over grading". பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.
  2. "STKDF now in SNOC's fold". பார்க்கப்பட்ட நாள் 29 May 2019.