சிங்கிஸ் ஐத்மாத்தவ்
சிங்கிஸ் அயித்மாத்தொவ் (ஆங்கில மொழி: Chyngyz Aitmatov) (12 திசம்பர் 1928 – 10 சூன் 2008) ரஷ்ய மற்றும் கிர்கிஸ் ஆகிய இரண்டு மொழிகளிலும் சிறந்த எழுத்தாளர். கிர்கிஸ்தான் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட நபர் ஆவார். இவரின் குறிப்பிடத்தக்க புதினங்கள் முதல் ஆசிரியர், குல்சாரி, ஜமீலா, சிகப்பு துண்டு அணிந்த என் சிறிய லின்டன் மரம், வெள்ளைக் கப்பல், அன்னை வயல் ஆகும் இவரின் பல புதினங்கள் உலகின் ஐம்பதுக்கும் மிகுதியான மொழிகளில் மொழிபெயற்கப்பட்டுள்ளன. பல புதினங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இவரின் அன்னை வயல் என்ற குறுநாவல் தமிழில் பூ. சோமசுந்தரத்தால் மொழிபெயர்கப்பட்டு 1966 இல் முதல் பதிப்பாகவும், 1985 இரண்டாம் பதிப்பாகவும் ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கிஸ் அயித்மாத்தொவ் | |
---|---|
சிங்கிஸ் அயித்மாத்தொவ் | |
பிறப்பு | செகர் கிராமம், கிர்கிஸ்தான், சோசோகுஒ | திசம்பர் 12, 1928
இறப்பு | சூன் 10, 2008 நியுரம்பெர்க், ஜெர்மனி[1] | (அகவை 79)
வகை | புதினம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஜமீலா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kyrgyz writer, perestroika ally Aitmatov dies," Reuters UK, 10 June 2008