சிங்கெலைட்டு
சல்போவுப்புக் கனிமம்
சிங்கெலைட்டு (Zinkenite) என்பது Pb9Sb22S42 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கருஞ்சிவப்பு கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும் இக்கனிமம் சல்போவுப்பு கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஈயம் ஆண்டிமனி சல்பைடு போன்ற ஆகியவற்றால் சிங்கெலைட்டு ஆக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஊசிபோன்ற வடிவ படிகங்களாகத் தோன்றுகிறது[1].
சிங்கெலைட்டு Zinkenite | |
---|---|
வாசிங்டனின் சிடீவன்சு மாகாண பார்கோ சுரங்கத்தின் சிங்கெலைட்டு | |
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்பு கனிமம் |
வேதி வாய்பாடு | Pb9Sb22S42 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | அறுங்கோணம் |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிங்கெலைட்டு கனிமத்தை Zkn[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
1826 ஆம் ஆண்டில் கிழக்கு செருமனியின் சாக்சோனி மாநிலத்திலுள்ள ஆர்சு மலைகளில் சிங்கெலைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. செருமானிய கனிமவியலாளர் மற்றும் சுரங்க நிலவியலாளரான யோகான் காரல் லுட்விக் சிங்கென் நினைவாக கனிமத்திற்கு சிங்கெலைட்டு என்று பெயரிடப்பட்டது [3][4].
மேற்கோள்கள்
தொகு- ↑ http://webmineral.com/data/Zinkenite.shtml Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/zinkenite.pdf Handbook of Mineralogy
- ↑ http://www.mindat.org/min-4417.html Mindat