சிடானேட்டு
பொதுவாக வெள்ளீய (Sn) சேர்மங்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது
சிடானேட்டு (stannate) என்ற சொல் பொதுவாக வெள்ளீய (Sn) சேர்மங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சிடானிக் அமிலம் Sn(OH)4), சிடானேட்டுகளைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகும். சிடானிக் அமிலம் இயற்கையில் காணப்படுவதில்லை ஆனால் SnO2 வின் நீரேற்றாகக் காணப்படுகிறது. பெயரிடும் வழக்கத்தில் ஒரு பின்னொட்டாகவும் சிடானேட்டு சொற்பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணம்: எக்சாகுளோரோசிடானேட்டு அயனி (SnCl62−)
பொருளறிவியலில் இரண்டு வகையான வெள்ளீய ஆக்சோ எதிர்மின் அயனிகள் வகைப்படுத்திக் காட்டப்படுகின்றன.
- ஆர்த்தோசிடானெட்டு: வெவ்வேறு வகையான SnO4−4 அலகுகளைக் கொண்டிருக்கும் (உதாரணம்: K4SnO4) அல்லது சிபைனல் கட்டமைப்பு (உதாரணம்:Mg2SnO4)
- விகிதவியல் அளவு மெட்டாசிடானேட்டு: MIISnO3, MI 2SnO3 போன்றவற்றில் பல்லுருவ எதிர்மின் அயனிகள் அல்லது சிலசமயங்களில் கலப்பு ஆக்சைடுகள் என விவரிக்கப்படுகின்றன.
இப்பொருட்கள் யாவும் குறைக் கடத்திகளாகும் [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Preparation, characterization and structure of metal stannates: a new family of photocatalysts for organic pollutants degradation." Handbook of Photocatalysts (2010), pp. 493–510. Nova Science Publishers, Inc., Hauppauge, NY